பொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் .. | Tamil247.info

பொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் ..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
தலையிலுள்ள முடியை சீவும் பொழுது வெள்ளை நிற துகள்கள் தோல் மீதோ அல்லது நாம் போட்டுள்ள துணி மீதோ விழுந்திருப்பது தெரிந்தால் உங்களுக்கு பொடுகு இருக்கிறது என உறுதி செய்துகொள்ளலாம்.
பொடுகு இருப்பதால் அடிக்கடி தலை சொரிய தோன்றும் அப்படி சொறிவதால் தோல் சிவந்து, தலையில் கட்டிகள் வரும்.

podugu thollai neenga 4 eliya ayurvedha maruthuvangal, veettu maruthuvam, paati vaithiyam, dandruff natural treatment in tamil

தலையில் பொடுகு உருவாக காரணங்கள்: 

1. அதிக மன அழுத்தம்
2. அதிக காட்டம் கொண்ட ஷாம்பூ உபயோகிப்பது 
3. மிகவும் குளிர்ந்த அல்லது அதிக வெப்பமுள்ள இடத்தில் இருப்பது
4. மன சோர்வு 
5. முறையற்ற உணவு 
7. உடல் நல குறைவு 
8. தொற்று நோய்கள்
பொடுகு சரியாக ஆயுர்வேத முறையில் இயற்க்கை மருத்துவங்கள் உள்ளது, அவற்றை எப்படி செய்வது என பார்ப்போம்.

இயற்க்கை வைத்திய முறை 1: 

தேவையானவை: தேங்காய் எண்ணை, கற்பூரம் 
செய்முறை: இரவு படுக்க போகும் முன் ஒரு கடாயில் நான்கு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணை விட்டு,  எண்ணை சூடாகும் பொழுது அதனுடன் கற்பூரம் சேர்த்து நன்றாக கலக்கி இறக்கி வைத்து என்னை வெது வெதுப்பு நிலையை அடைந்தவுடன் தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்துவிட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடலாம்.

இயற்க்கை வைத்திய முறை 2: 

தேவையானவை: வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்.
செய்முறை: வெந்தயத்தை இரவு முழுக்க தண்ணீரில் ஊறவைத்து ஊறிய விதையை வடிகட்டி எடுத்து அரைத்து பசையாக்கி அதை தலையில் தடவி மசாஜ் செய்து விட்டு சீயக்காய் அல்லது புங்கன் விதை தூளால் தலையை கழுவலாம். 

இயற்க்கை வைத்திய முறை 3: 

தேவையானவை: முட்டை வெள்ளை கரு - 2,  லெமன் ஜூஸ் - 4 டேபிள் ஸ்பூன் 
செய்முறை: இரண்டு முட்டை வெள்ளை கருவை எடுத்து அதனுடன் 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாரை விட்டு நன்கு கலக்கி அதை தலையில் தடவி அரைமணி நேரம் வைத்திருந்து பிறகு கழுவலாம். 

 

இயற்க்கை வைத்திய முறை 4: 

தேவையானவை: வேம்பு இல்லை - ஒரு கை பிடி,  தண்ணீர் - 1/2 லிட்டர் 
செய்முறை: ஒரு கைப்பிடி வேப்ப இலையை எடுத்து நன்கு அரைத்து பசையாக்கி பசையை அரை லிட்டர் தண்ணீருடன் கலந்து தலையை கழுவி பிறகு நல்ல தண்ணீரில் தலையை கழுவி வரலாம்.
மேற் சொன்ன 4 எளிய பொடுகு நீக்கும் வைத்திய முறைகளில் உங்களுக்கு பொருத்தமானதை கடைபிடித்து வந்தால் பொடுகு(dandruff) தொல்லைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

3 Natural home remedies to cure Dandruff ..
podugu neenga, podugu treatment in tamil, Hair Dandruff Treatment‎, podugu thollai theera, Home remedies in tamil, health tips in tamil, beauty tips in tamil, dandruff home remedies in tamil, dandruff and hairfall natural cure,  dandruff removal, fenugreek, neem, coconut oil, camphor, lemon juice, egg white to cure dandruff in men and women

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் ..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் ..
Tamil Fire
5 of 5
தலையிலுள்ள முடியை சீவும் பொழுது வெள்ளை நிற துகள்கள் தோல் மீதோ அல்லது நாம் போட்டுள்ள துணி மீதோ விழுந்திருப்பது தெரிந்தால் உங்களுக்கு பொடுகு ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News