மதுவை குடிக்க தொடங்கும் யாருமே ஒரு குடிகாரன்/குடிகாரி ஆகவேண்டும் என்று குடிப்பதில்லை..! | Tamil247.info

மதுவை குடிக்க தொடங்கும் யாருமே ஒரு குடிகாரன்/குடிகாரி ஆகவேண்டும் என்று குடிப்பதில்லை..!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
இரண்டு நாட்கள் முன்புதான் சில கேடுகெட்ட இளைஞர்கள் ஒரு குழந்தையை குடிக்க வைத்த கானொளி வெளியாகி நம் அனைவரையும் கதிகலங்க வைத்தது. இப்போது பள்ளி மாணவி குடித்துவிட்டு வந்துள்ளதாக செய்திகள். காதல் தொல்வியால் இந்த மாணவி குடித்துள்ளதாகவும் செய்திகள்.

kudi podhai kaaranam, plus 2 manavi kudi podhai kaaranam, tamilnadu TASMAC awareness

///// கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, சாய்பாபா காலனி அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நேற்று, துடியலூர் அருகே நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அங்கிருந்த போலீஸார் மாணவியை மீட்டு விசாரித்துள்ளனர். அப்போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. போலீஸார் கூறும்போது, ‘அவர் பள்ளிக்குச் செல்லாமல், பள்ளிச் சீருடையிலேயே பீளமேடு அருகில் உள்ள வணிக வளாகத்துக்கு வந்துள்ளார். அங்கு குளிர்பானத்தில் மது கலந்து அருந்தியுள்ளார். அங்கேயே நிலை தடுமாறிய நிலையில் அவர் காணப்பட்டுள்ளார். அவரை நண்பர்கள் இரு சக்கர வாகனத்தில் அமரவைத்து பாதுகாப்பாக அழைத்து வந்தபோது, சாலையில் விழுந்துவிட்டார் - நன்றி தமிழ் ஹிந்து ///

இந்த குடிப்பழக்கத்தை குறித்து நாம் அனைவரும் மெத்தனமாக இருந்துக் கொண்டிருப்பதால் ஒரு மிகப்பெரும் சீரழிவிற்கு காரணமானவர்களாக நாம் இருப்போம். குடிப்பழக்கம் என்பது இன்றைய தலைமுறையை எப்படி அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது.

குடியின் கொடூரத்தை குறித்து எழுதுங்கள். குடியின் அவலத்தை குறித்து பேசுங்கள். ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். எத்தனை காரணங்கள் சொல்லி தட்டி கழித்தாலும், பூரன மதுவிலக்கை தவிர வேறு எதுவுமே சிறந்தது இல்லை. அதை அமலாக்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.

மதுவை குடிக்க தொடங்கும் யாருமே ஒரு குடிகாரன்/குடிகாரி ஆகவேண்டும் என்று குடிப்பதில்லை. எல்லோருமே "எப்போதாவது" என்றுதான் தொடங்குகிறார்கள். பாழும் கிணற்றில் விழுகிறார்கள். இதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.


Via Prakash Pkudi podhai kaaranam, plus 2 manavi kudi podhai kaaranam, tamilnadu TASMAC awareness, tamil news, drinking alcohol effect, 12th std girl drunk in Kovai, vilippunarvu post in tamil 
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'மதுவை குடிக்க தொடங்கும் யாருமே ஒரு குடிகாரன்/குடிகாரி ஆகவேண்டும் என்று குடிப்பதில்லை..!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
மதுவை குடிக்க தொடங்கும் யாருமே ஒரு குடிகாரன்/குடிகாரி ஆகவேண்டும் என்று குடிப்பதில்லை..!
Tamil Fire
5 of 5
இரண்டு நாட்கள் முன்புதான் சில கேடுகெட்ட இளைஞர்கள் ஒரு குழந்தையை குடிக்க வைத்த கானொளி வெளியாகி நம் அனைவரையும் கதிகலங்க வைத்தது. இப்போது பள...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News