ஆன்மீகம் | ஆன்மிகம் - எது சரியான சொல்? | Tamil247.info
Loading...

ஆன்மீகம் | ஆன்மிகம் - எது சரியான சொல்?

பலரும் "ஆன்மீகமா | ஆன்மிகமா - எது சரி?" என்கிறார்கள். இந்த வினாவிற்குத் தெளிவான - சரியான - உண்மையான - இலக்கணச் சுத்தமான விடை "ஆன்மிகம்" என்பதே!
aanmeegam aanmigam idhil edhu sariyaana sol vilakkam, aanmiga vilakkam, tamil devotional doubts, theivigam,


 சமயம், மதம், ஆத்திகம் தொடர்புடையவர்களால் வழங்கப்படும் ஒரு சொல் "ஆன்மிகம்". இச்சொல்லே சரியான சொல்லாகும். பெரும்பாலோர் ஆன்மீகம் என்று தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர்.

 ஆன்ம + இகம் = ஆன்மிகம் ஆயிற்று.

 அதாவது, ஆன்மக் கொள்கைகளின் பிழிவுச் சாரமே ஆன்மிகம் ஆயிற்று.

 ஒரு முக்கியக் கொள்கையின் பிழிவுச்சாரம் என்பது இகம் - இயம் - இசம் - இயல் எனப் பல பெயர்களில் வழங்கப்படும்.

 இகம் - இயம் - இசம் என்னும் சொற்களே சரி - உண்மை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

 காரல் மார்க்ஸின் கொள்கைப் பிழிவுச்சாரம் "மார்ச்சியம்" எனப்பட்டது. "மார்க்சீயம்" அன்று.

அதேபோன்று பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப் பிழிவுச்சாரம் "அண்ணாயிசம்" என்றும் ("அண்ணாயீசம்" அன்று),

லெனினின் கொள்கைப் பிழிவுச்சாரம் "லெனினியம்" என்றும் ("லெனினீயம்" அன்று),

காந்தியடிகளின் கொள்கைப் பிழிவுச்சாரம் "காந்தியம்" என்றும் ("காந்தீயம்" அன்று),

புத்தரின் கொள்கைப் பிழிவுச்சாரம் "புத்திசம்" என்றும், ("புத்தீசம்" அன்று),

தேசம் பற்றிய கொள்கைப் பிழிவுச்சாரம் "தேசியம்" என்றும் ("தேசீயம்" அன்று),

அம்பேத்கரின் கொள்கைப் பிழிவுச்சாரம் "அம்பேத்கரியம்" என்றும் ("அப்பேத்கரீயம்" அன்று) அழைக்கப்பட்டன - அழைக்கப்படுகின்றன.

இவை தவிர, கண்ணியம், பெண்ணியம், கம்யூனிசம், சோசலிசம், தெய்விகம், ஆத்திகம், நாத்திகம் எனக் கூறிக்கொண்டே செல்லலாம். ஆக, இவை போன்று ஆன்மக் கொள்கைகளின் பிழிவுச்சாரமே "ஆன்மிகம்" ஆயிற்று. எனவே, ஆன்மிகம் என்று எழுதுவதும் பேசுவதுமே சரியான பொருள் பொதிந்த சொல்லாகும்.

-குடந்தை வய்.மு. கும்பலிங்கம்
Source: Dinamani Newspaper Palarum "aanmeekamaa | aanmikamaa - ethu sari?" Enkiraarkal. Inta vinaavirku thelivaana - sariyaana - unmaiyaana - ilakkana suttamaana vidai "aanmikam" enpathe!
samayam, matham, aattikam thodarpudaiyavarkalaal vazhankappadum oru sol "aanmikam". Ichollhe sariyaana sollaagum. Perumpaalor aanmeekam enru thavaraaka ezhutiyum phesiyum varukinranar.

aanma + ikam = aanmikam aayitru.

Ataavatu, aanmak kolgaikalin pizhivu saaramhe aanmikam aayirru.

Oru mukkiyak kolgaiyin pizhivuchaaram enpatu ikam - iyam - isam - iyal enap pala peyarkalil vazhankappadum.

Ikam - iyam - isam ennum sorkalhe sari - unmai enpatharku sila edutthukkaattugalai kaanpom.

Carl maarxin kolgaip pizhivuchaaram "maarxsiyam" enappaddatu. "Maarkseeyam" enru. Atheponru pherarignar annaavin kolgaip pizhivuchaaram "annaayisam" enrum ("annaayeesam" anru), leninin kolgaip pizhivuchaaram"leniniyam" enrum ("lenineeyam" anru), kaantiyadikalin kolgaip pizhivuchaaram"kaantiyam" enrum ("kaantheeyam" anru), puttarin kolgaip pizhivuchaaram"puttisam" enrum, ("puttheesam" anru), thesam parriya kolgaip pizhivuchaaram"thesiyam" enrum ("theseeyam" anru), amphetkarin kolgaip pizhivuchaaram"amphetkariyam" enrum ("apphetkareeyam" anru) azhaikkappaddana - azhaikkappadukinrana.

Ivaitavira, kanniyam, penniyam, kamyunisam, sosalisam, theyvikam, aattikam, naattikam enak koorikkonde sellalaam. aaka, ivai ponru aanmak kolgaigalin pizhivuchaaramhe "aanmikam" aayirru. Enavhe, aanmikam enru ezhutuvatum phesuvatumhe sariyaana porul potinta sollaakum.

aanmeegam aanmigam idhil edhu sariyaana sol vilakkam, aanmiga vilakkam, tamil devotional doubts, theivigam, 
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'ஆன்மீகம் | ஆன்மிகம் - எது சரியான சொல்?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
ஆன்மீகம் | ஆன்மிகம் - எது சரியான சொல்?
Tamil Fire
5 of 5
பலரும் "ஆன்மீகமா | ஆன்மிகமா - எது சரி?" என்கிறார்கள். இந்த வினாவிற்குத் தெளிவான - சரியான - உண்மையான - இலக்கணச் சுத்தமான விடை "...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment