கர்ப்பம் தரித்திருக்கிறேனா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள் | Tamil247.info

கர்ப்பம் தரித்திருக்கிறேனா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

கர்ப்பம் அடைந்துள்ளதர்க்கான சில அறிகுறிகள்.. 

[karpam adaidhuvitta pen enbadharkaana arigurigal sila - Karpam symptoms: pregnancy symptoms in tamil]  karpa kalathil, karpa kala arikurigal in tamil

திருமணமான பெண்கள் முதன் முதலில் கர்ப்பம் தரிக்கும் பொழுது அனுபவமின்மையால் தான் கர்ப்பம் அடைந்துவிட்டேனா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் குழம்பியுள்ளனர். அவர்களின் குழப்பத்தை நிவர்த்தி செய்யும்வகையில் கர்ப்பம் தரித்ததர்க்கான சில அறிகுறிகளை இங்கே பதிவு செய்துள்ளோம்.

pregnancy symptoms in tamil, karbam symptoms, thaimai, karu tharippu kandupidikkum muraigal,
மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போனால் மட்டும் கர்ப்பமாக இருக்கிறோம் என்று முடிவு செய்து விட முடியாது. இருப்பினும், மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போவதுடன், ஒருசில அறிகுறிகளும் தென்பட்டால், கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

Related : பெண்களை அதிகமாக தாக்கும் பி.சி.ஓ.எஸ்., குழந்தையின்மை பிரச்சனை நோய்

தலைச்சுற்றல் அல்லது மயக்கமுறுதல்: இது திரைப்படங்களில் பெரும்பாலாக காட்டப் படும் ஆரம்ப அறி குறியாகும். ஆனால் உண்மையின் அடிப்படை என்னவென்றால், குறைந்த சர்க்கரை அளவு அல்லது இரத்த அழுத்தம் கூட ஒரு குழப்பமான அத்தியாயத்தை ஏற்படுத்தும். எனவே நன்கு சாப்பிட்டு, போதுமான நீரை எடுத்துகொள்ள வேண்டும். இதன் பின்னரும் தொடர்ந்தால், கர்ப்பம் தான். (thalai suttral, mayakkam)

குமட்டல்: 


 அநேக கர்ப்பிணி பெண்களுக்கு கருவானது 6 வாரங்கள் சேர்ந்து இருக்கும் போது குமட்டல் ஏற்படுகிறது. ஆனால் சிலருக்கு காலை சுகவீனம் (துரதிர்ஷ்டவசமாக காலை, மதியம் மற்றும் இரவு ஏற்படலாம்) ஏற்படுவதை உணரமுடியும். இது இரண்டாவது மூன்று மாத காலகட்டத்தில் நுழையும் போது பெரும்பாலும் குறைய வேண்டும். இடையிடையே வயிறு நிரம்பக்கூடிய நொறுக்கு தீனி மற்றும் இஞ்சிமிட்டாய் போன்றவற்றை சாப்பிட வேண்டும். ( Kumattal)

மூச்சு திணறல்: 


மாடிப்படி ஏறும்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்படுகிறதா? அப்படியானால் அது கர்ப்பமாக இருப்பதால் இருக்கலாம். வளரும் கருவிற்கு ஆக்சிஜன் தேவை என்பதால், சுவாசத்திற்கு ஒரு சிறிய குறுகிய இடைவெளி ஏற்படலாம். ஏன் இந்த நிலைமையானது கர்ப்பகாலம் வரையிலும் தொடரலாம். ஏனெனில் வளர்ந்து வரும் குழந்தை, தாயின் நுரையீரல் மற்றும் உதரவிதானம் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பதன் விளைவாக ஏற்படுகிறது. (Moochu thinaral)

மார்பகங்களில் ஏற்படும் தளர்வு: 


 உள்ளாடையை அணியும் போது லேசான சித்திரவதை ஏற்படுவதை போல் உணர்வது அல்லது மார்பகங்கள் கொஞ்சம் பெரியதாக உள்ளது போன்ற உணர்வு அல்லது மென்மையான மற்றும் கனத்த மார்பகங்களின் உணர்வு, மார்பக காம்பு கருமையடைதல் மற்றும் மார்பு நரம்புகள் விறைப்படைதல் முதலியன கர்ப்பமாக இருப்பதற்கு ஒரு முதல் அறிகுறியாக இருக்க முடியும். எனவே இந்த அசௌகரியத்தை தவிர்ப்பதற்கு, படுக்கைக்கு செல்லும் முன் மிகவும் எளிதான உள்ளாடையை அணியலாம். (Maarbagangalil erppadum thalarvu)

Related: பெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..

சோர்வு: 


புத்தகத்தில் ஒரு பக்கத்தை படித்து முடிப்பதற்கு முன்னதாகவே, தூக்கம் வந்து விட்டது என்றால் அல்லது திடீரென்று சோர்வடைந்தாலோ, அது உடலில் அதிகரிக்கும் ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாம். பல பெண்களுக்கு சோர்வு முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்து இருக்கும். ஆனால் பின்னர் இது விட்டு விட்டு வரும். ( sorvu, thookkam)

அடிக்கடி சிறுநீர் கழித்தல்: 


 திடீரென்று சிறுநீர் கழிக்காமல் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை என்றால், கர்ப்பம் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். கர்ப்பகாலத்தில் உடலானது கூடுதல் திரவங்களை உற்பத்தி செய்வதன் மூலமாக, சிறுநீர்ப்பைக்கு அதிக வேலை இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ( adikkadi siruneer kazhitthal)

Related: அந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா?

தலைவலி:  


கர்ப்பமாக இருப்பதன் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று, ஹார்மோன் மாற்றங்கள் விளைவாக ஏற்படும் தலைவலியாகும். ( thalaivali)

பின் முதுகு வலி: 


முதுகு வலி இல்லாத போது, பின் முதுகு லேசாக தளர்வாக காணப்பட்டால், அது தசைநார்கள் தளர்ந்து வருவதன் காரணமாக ஏற்படுகிறது. சொல்லப்போனால் இந்த வலியானது கர்ப்ப காலம் முழுவதும் தொடர்ந்து இருக்கும். ஏனென்றால், கர்ப்பத்தின் போது எடை அதிகரிப்பதால், ஈர்ப்பு மையம் விலகுவதன் காரணமாக இது ஏற்படுகிறது. (Pin mudhugu vali)

தசைப்பிடிப்பு: 


 இது மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறியா? அல்லது கர்ப்பமா? என்பதைச் சொல்ல கடினமாக இருக்கிறது. ஆனால் சுரண்டுவதை உணர்கிறீர்கள் என்றால், அது குழந்தை வளர்வதற்கு தயாராக கருப்பை நீட்சி அடைகிறது என்று அர்த்தம். (Thasai pidippu)

பசி அல்லது உணவு தாகம்:  


திடீரென்று, வயிறு போதுமான சிட்ரஸ் பெற முடியாத நிலை அடையும் போது அல்லது வயிற்றில் அஜீரண கோளாறு முதலியவை புதியதாக தோன்றும் பட்சத்தில் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ள முடியும். (Pasi, thaagam)

மலச்சிக்கல் மற்றும் வீக்கம்:  


கடந்த வாரம் தான் ஜீன்ஸ் பொருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது சற்று இறுக்கமாக மற்றும் உடல் பெரியதாக காணப்பட்டால் அது செரிமான அமைப்பு குறைவடைவதன் காரணமாக ஏற்படுகிறது. இது கர்ப்பத்தின் காரணமாக, கூடுதல் புரோஜெஸ்டிரோன் உருவாவதன் மூலமாக ஏற்படுகிறது. (Mala sikkal, veekkam)

Related: பொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் ..

அடிக்கடி மாறும் மனம்: 


அடிக்கடி மனதில் சந்தோஷம், கஷ்டம் போன்ற மாற்றங்களை உணர்கிறீர்கள் என்றால், உடல் நலம், புதிய ஹார்மோன்களை அனுசரிக்க ஆரம்பித்து விட்டது என்று பொருள். (adikkadi maarum mananilai)

உடலின் அடிப்பகுதி வெப்பநிலை அதிகரிப்பு: 


தீவிரமாக கர்ப்பிணியாக முயற்சி செய்கிறீர்கள் என்றால், உடலின் அடிப்பகுதியின் வெப்ப நிலையை கருத்தரிப்புக்கு சாத்தியமாக உயர்த்தி கொண்டிருக்கிறீர்கள். இரண்டு வாரங்கள் வரை பொதுவாக இந்த வெப்ப நிலையானது கருத்தரிப்பதற்கு சாத்தியமாக உயர்ந்து கொண்டு இருக்கும். அதன் பிறகும் இந்த உயர்ந்த வெப்ப நிலையானது காணப்பட்டால், கருவுற்றிருப்பது உறுதி செய்யப்படுகிறது. (udalin adippagudhi veppanilai adigarippu)

ஸ்பாட்டிங்(சற்று முன்பாகவே இரத்தப்போக்கு): 


மாதவிடாய் வரவில்லையா? அல்லது அது சாதாரணமாக வருவதை விட லேசாக இருந்தது என்றால் மற்றும் எதிர்பார்க்கும் நாட்களை விட சற்று முன்பாகவே வந்துவிட்டது என்றால், இப்போது இருப்பது முட்டை கருவுறுதலின் போது ஏற்படக்கூடிய இரத்த போக்கு ஆகும். ஏனென்றால் கருவுற்ற முட்டை கருப்பையின் சுவர்களில் பொருந்தும் போது, சற்று இரத்தப்போக்கு ஏற்படும். udhirapokku, ratha pokku

மாதவிடாய் தாமதமாக ஏற்படுவது: 


 கர்ப்பம் உண்டாவதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் சொல்லப்படும் தடயம் மாதவிடாய் தாமதமாவது. (maadhavidaai thaamadhamaaga erppaduvadhu)

Related : பாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!!

கர்ப்ப சோதனை: 


 உறுதியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்றால், ப்பீ-ஸ்டிக் சோதனை (pee-stick test) செய்து கொள்ளும் வரை, அதை உறுதி செய்து கொள்ள முடியாது. அந்த சோதனை முடிவு எதிர்மறையாக தங்களுக்கு கர்ப்பம் இல்லை என்று தெரிய வந்தும் மாதவிடாய் தாமதமானால், ஒருவேளை சற்று முன்னரே இந்த சோதனையை செய்துள்ளீர்கள் என்று அர்த்தம். ஆகவே சில நாட்கள் காத்திருந்து மீண்டும் முயற்சிக்க வேண்டும். (karppa parisodhanai)

pregnancy symptoms in tamil, karbam symptoms, thaimai, karu tharippu kandupidikkum muraigal, self pregnancy test in tamil, tamil health tips for married women, Ladies health doubts, pregnancy doubts in tamil, karppam adaindha arigurigal, thaimai adaidhal, karu tharikka, maadhavidaai thalli pogiradhu, povadhu, karbini pen, karu uruvana neram
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'கர்ப்பம் தரித்திருக்கிறேனா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
கர்ப்பம் தரித்திருக்கிறேனா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்
Tamil Fire
5 of 5
கர்ப்பம் அடைந்துள்ளதர்க்கான சில அறிகுறிகள்..  [karpam adaidhuvitta pen enbadharkaana arigurigal sila - Karpam symptoms: pregnancy sympto...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News