07 மே 2015

, , ,

உடல் ஆரோக்கியமாக வாழ 5 வழிகள்..!

Udal arokkiyamaaga vaazha 5 vazhigal- 5 ways to live healthy , health tips in tamil, Healthy food, deep sleep, drink a lot of water, calcium for bones, regular body fitness

Udal arokkiyamaaga vaazha 5 vazhigal- 5 ways to live healthy ..! 

சீராக பராமரிக்கக்கூடிய உடலைக் கொண்டே சிறந்த ஆரோக்கியம் பெற முடியும். அதன் மூலம் தான் அருமையான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இது தானே புத்திசாலித்தனம்?

udal arokkiya vazhvirkku sirandha vazhigal, 5 ways to live healthyஇனி சிகரெட்டை தொட மாட்டேன்... மது அருந்துவதை அறவே விட்டு விடுவேன்...காபி, டீ குடிக்க மாட்டேன்... எண்ணெயில் வறுத்தெடுத்த பலகாரத்தை தொடவே மாட்டேன்... தினமும் 2 மணி நேரத்துக்கு மேல் டி.வி. பார்க்க மாட்டேன்... காலை 5 மணிக்கு எழுந்து இரவு 9 மணிக்கு உறங்கச் சென்று விடுவேன்... லேப்டாப், மொபைலை இரவில் தொட மாட்டேன்... தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வேன்... பரீட்சைக்கு முதல் நாள் மட்டுமே படிக்காமல், அன்றைய பாடங்களை அன்றன்றே படித்துவிடுவேன்... தினமும் காலை எழுந்து நடைப் பயிற்சி செய்வேன்... ஓட்டப் பயிற்சி செய்வேன்... - இப்படி ஒவ்வொரு புத்தாண்டின் போதோ, பிறந்த நாளின் போதோ பற்பல புத்தாண்டு உறுதி மொழிகளை (New Year / Birthday Resolutions) எடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

ஆனால், ஜனவரி 31க்குள் அனைத்தும் தூள் தூளாகி, பழைய கதையை ஆரம்பித்து விடுகிறோமே? முன்பெல்லாம் கல்யாணம் அல்லது ஏதாவது குடும்ப விசேஷங்களுக்குத்தான் சாப்பாடு அயிட்டங்கள் தட புடலாக இருக்கும். அதுவே பின்பு மெதுவாக மாதம் ஒருமுறை சம்பள தின பார்ட்டியாகி, வார இறுதி பார்ட்டி ஆகி, இப்போது தினசரி பார்ட்டியாக வளர்ந்து நிற்கிறது. இதனால் கட்டுப்பாடு இல்லாத உணவு வகைகளை உண்டு, நம் பெற்றோர் அளித்த அருமையான உடலை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் இருந்து தப்பிக்க முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறது மனிதஇனம். பேணிப் பராமரிக்கக்கூடிய மனிதனின் வயிறு, இப்போது குப்பைத் தொட்டியாக மாறி வருகிறது. இதிலிருந்து மீண்டும் அழகான உடலையும், நல்ல ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்க்கையையும் பெறவே, இந்த சில அருமையான வழிகள்...


1. ஆரோக்கிய உணவு
நம் முன்னோர் கூறியபடி Eat breakfast like a king, lunch like a prince and dinner like a pauper என்பதைப் பின்பற்றுங்கள். அனைத்து வகை தானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, கோழி, மீன் என அனைத்தும் கலந்த சரிவிகித உணவு (Balanced Diet) எடுத்துக்கொள்வது அவசியம். அதிக அளவு அரிசி, மைதா வேண்டாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், எண்ணெயில் வறுத்தெடுத்த பண்டங்கள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை குறைப்பது அல்லது சேர்க்காமலே இருப்பது நல்லது. 3 வேளை மூக்குப்பிடிக்கச் சாப்பிடுபவராக இருப்பின், அதையே 5 வேளைகளுக்கு சிறிது சிறிதாக சாப்பிடக் கற்றுக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தமம்.
 
2. உடற்பயிற்சிக் கூடம்
வீட்டுக்கு அருகாமையில் உள்ள நல்ல உடற்பயிற்சிக் கூடத்தில் உடனடியாகச் சேருங்கள். குறைந்தது தினமும் 45 நிமிடங்கள், வாரம் 4 நாட்கள் பயிற்சி மேற்கொள்வதால் அதிக கொழுப்பை நீக்கலாம். அதோடு, தேவைக்கு அதிகமாக உடலில் தங்கியுள்ள உணவுச் சேர்க்கையை எரித்து (Reduce or Burn Extra Calories) பயன் பெறலாம். பட்டினியாக - ஒரு வேளை அல்லது இரு வேளை சாப்பிடாமல் இருந்து எடை குறைக்க எண்ணுவது மடமையே. தசைகள் வலு விழந்து உங்கள் உடலை மேலும் வாட்டி விடும் (An empty stomach can lead to muscle loss).

3. எலும்புகளுக்கு கால்சியம்
அதிக உழைப்பின் காரணமாக எலும்புகளின் சக்தி குறையத் தொடங்கும். அதனால் மருத்துவர் ஆலோசனையுடன் நேரடியாகவோ, உணவிலோ கால்சியம் எடுத்துக்கொள்வது எலும்புகளின் உறுதிக்கு அவசியம். எலும்புகள் உறுதி இல்லை எனில் தசைகள் வலிமை இழந்து, அவ்வப்போது பல பாகங்களில் தசைப் பிடிப்பு உண்டாகும்.

4. நிறைய தண்ணீர்
உங்களின் எடையை சீராக வைத்துக் கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இது உடலை சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது.

5. ஆழ்ந்த உறக்கம்
தூக்கமின்மையே இதயம், கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, பருமன், மன அழுத்தம் போன்ற பலவிதமான அபாயகரமான பிரச்னைகளுக்கு மூல காரணம். நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் சிறந்த தியானத்துக்குச் சமமாகும். நல்ல உறக்கத்தால் உடல் உறுப்புகள் ஓய்வு பெறுகின்றன. ரத்த நாளங்கள் அமைதி அடைகின்றன. நீண்ட ஆயுளுக்கும், உடல் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமையான டாக்டரே - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்!

1. Health Food, 2. Regular exercise(body fitness, yoga), 3. Calcium for bones, 4. drink lot of water, 5. deep sleep, arokkiya vazhivirkku sirandha vazhigal, aazhndha urakkam, niraya thanner kudikkavendum, udal uzhaippu, nalla arokkiya unavu, elumbugalukku calciumஎனதருமை நேயர்களே இந்த 'உடல் ஆரோக்கியமாக வாழ 5 வழிகள்..! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News