11 மே 2015

[video] போலிசுக்கு பொதுமக்கள் தரும் தர்ம அடி காட்சி..

Traffic Police who caused accident and a reason for youth murder in chennai road, lanjam vaanga ilagnanai piditthu izhutthu kile thall kolai seidha police kku adi udhai

Chennai (10 May 2015): பைக்கில் சென்றவனை பிடித்து 100 ருபாய் லஞ்சம் வாங்க இழுத்ததால் வாலிபர் கிழே விழுந்து மரணம். போலிசுக்கு தர்ம அடி..

சென்னை கே.கே.நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களைப் பிடித்து இழுத்ததால் கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸாரை  பொதுமக்கள் போட்டு பிளந்தனர், கட்சியை கிழே உள்ள கானொளியில் காணலாம்.
மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த வடிவேலு மகன் செல்வம், அவரது நண்பர்கள் அதேப் பகுதியைச் சேர்ந்த ராஜா, விக்னேஷ் ஆகிய 3 பேரும் சனிக்கிழமை ஒரு மோட்டார் சைக்கிளில் அசோக்நகரில் உள்ள ஒரு திரையரங்கில் திரைப்படம் பார்க்கச் சென்றனர்.

மூவரும் கே.கே.நகர் விஜயராகவபுரம் 80 அடி சாலையில் செல்லும்போது, அங்கு நின்று கொண்டிருந்த கே.கே.நகர் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் சற்குணம் தலைமையிலான போலீஸார், மோட்டார் சைக்கிளை மறித்தனர். ஆனால், 3 பேரும், போலீஸாரிடமிருந்து தப்பிக்க, சற்று விலகி வேகமாகச் செல்ல முயன்றனர். அப்போது, அங்கு நின்றிருந்த போலீஸார், மோட்டார் சைக்கிளில் கடைசியாக இருந்த விக்னேஷின் சட்டையைப் பிடித்து இழுத்தாராம். இதில் நிலை தடுமாறி அந்த மோட்டார் சைக்கிள், அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது மோதியது.

 இந்த விபத்தில் சாலைத் தடுப்பில் இருந்த கம்பி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த செல்வத்தின் வயிற்றுப் பகுதியில் குத்தி, பலத்த காயம் ஏற்பட்டது. அதிக ரத்தப் போக்கு காரணமாக செல்வம் சிறிது நேரத்தில் இறந்தார்.

 இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸாரைத் தாக்கினர். மேலும் காவல்துறை வாகனத்தையும் தாக்கி உடைத்தனர்.

public punish a Traffic Police who caused accident and a reason for youth murder in chennai road, lanjam vaanga ilagnanai piditthu izhutthu kile thall kolai seidha police kku adi udhaiஎனதருமை நேயர்களே இந்த '[video] போலிசுக்கு பொதுமக்கள் தரும் தர்ம அடி காட்சி.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News