சம்மர் வெயிலுக்கு சில டிப்ஸ்.. | Tamil247.info
Loading...

சம்மர் வெயிலுக்கு சில டிப்ஸ்..

summer skin care tips in tamil

சம்மர் டிப்ஸ் ( Summer katthiri veyilukku sila tips)

முகம் மேன்மை பெற: மாதுளம் பழத் தோலை சிறு துண்டுகளாக்கி காய வைத்து பொடி செய்து அதனுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து கழுவுங்கள். முகம் மென்மை பெறும்.

முகம் நல்ல நிறமும் அழகும் பெற: ஓட்ஸை மாவாக அரைத்துக் கொண்டு அத்துடன் கொஞ்சம் கெட்டித் தயிரைச் சேர்த்து முகத்தில் பரவலாகப் பூசிக் கொண்டு 20 நிமிடம் ஊறவிட்டு கழுவுங்கள். முகம் நல்ல நிறமும் அழகும் பெறும்.

வறண்ட சருமம் காணாமல் போக: தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றையும் கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 12 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தைக் கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.


கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய: வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும் புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணெய்ப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப் படுத்தும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச் சாற்றை முகத்தில் தடவலாம். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

சருமம் மங்காமல், செழுமையுடன் இருக்க: கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப் படுவது சருமம்தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்ற வற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

உடல் சூடு குறைய: கோடை கத்தரி வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வும் கிடைக்கும்.

கோடை வியர்வை நாற்றம்:
கோடைக் காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச் சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும்.

 Summer katthiri veyilukku sila tips, Kodai kala saruma paadhugappu muraigal, iyarkkai alagu kurippugal
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'சம்மர் வெயிலுக்கு சில டிப்ஸ்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+




SHARE WhatsApp SHARE
சம்மர் வெயிலுக்கு சில டிப்ஸ்..
Tamil Fire
5 of 5
சம்மர் டிப்ஸ் ( Summer katthiri veyilukku sila tips) முகம் மேன்மை பெற: மாதுளம் பழத் தோலை சிறு துண்டுகளாக்கி காய வைத்து பொடி செய்து அதனு...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment