10 மே 2015

, ,

[சமையல்] சிறுதானிய அரைக்கீரை அடை

Sirudhaaniya araikeerai adai samayal recipe, tamil recipes, healthy snacks and breakfast recipes in tamil, samayal seimurai

சிறுதானிய அரைக்கீரை அடை செய்வது எப்படி(Sirudhaaniya araikeerai adai samayal recipe)

millets recipes, siruthaniya recipes in tamil

தேவையான பொருட்கள்:

  1. சாமை அரிசி, வரகு அரிசி, தினை அரிசி - அரை கிண்ணம்
  2. அரைக்கீரை மற்றும் முருங்கை கீரை - அரை கிண்ணம்
  3. மிளகாய் தூள் - தேக்கரண்டி
  4. எண்ணெய் - தேவையான அளவு
  5. உப்பு - தேவையான அளவு

அடை செய்முறை:
மேற்சொன்ன மூன்று சிறுதானிய அரிசிகளையும் கழுவி, ஒன்றரை மணி நேரம் ஊற வைத்த பின், கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும். கீரைகளை நன்றாக கழுவி, பொடி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள மாவில் தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு மற்றும் நறுக்கிய கீரைகளை சேர்த்து கிளறி, அடைகளாக தட்டி, தோசை கல்லில் இட்டு வேகவைத்து எடுத்தால், சுவையான, சத்தான சிறுதானிய அரைக்கீரை அடை தயார்.

பயன்கள்:
வரகு, சாமை  மற்றும் தினை ஆகிய மூன்று சிறுதானிய அரிசிகளும், எல்லா வயதினருக்கும் எளிதில் ஜீரணமாக கூடியவை. உடலில் உள்ள தெவையற்ற கொழுப்பை குறைக்க இவை உதவும்; இதனால் உடல் பருமனை குறைக்கும். மலச்சிக்கலை தினை அரிசி நீக்கும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற இது மிகவும் உதவும். இவற்றில் வைட்டமின் டி, தாது உப்புகள், பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற உடலிற்கு தேவையான சத்துகள் நிறைந்துள்ளன.

- லீலாவதி சீனிவாசன்
சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்

Sirudhaaniya araikeerai adai samayal recipe, tamil recipes, healthy snacks and breakfast recipes in tamil, samayal seimurai எனதருமை நேயர்களே இந்த '[சமையல்] சிறுதானிய அரைக்கீரை அடை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News