03 மே 2015

,

[சமையல்] மிக்ஸ்ட் புரூட் சப்பாத்தி

Mixed fruit chappathi recipe, tamil samayl, chappathi samayal

மிக்ஸ்சட் புரூட் சப்பாத்தி ( Mixed fruit chappathi recipe)
  புரூட் சப்பாத்தி செய்ய தேவையானவை:
  1.  வாழைப்பழம் - 2
  2.  அன்னாசிப்பழம் - 5 துண்டுகள்
  3.  பேரீச்சம்பழம் - 4 ( கொட்டை நீக்கியது)
  4.  கறுப்பு திராட்சை - 50 கிராம்
  5.  கோதுமை மாவு - 300 கிராம்
  6.  உப்பு - மூன்று சிட்டிகை
  7.  ஆப்பசோடா - 3 சிட்டிகை
  8.  நெய் - 50 கிராம்.
Mixed செய்முறை விளக்கம் : திராட்சை, அன்னாசிப்பழம் அடித்து சாறு எடுக்க வேண்டும். வாழைப் பழத்தையும் பேரீச்சம் பழத்தையும் சேர்த்து விழுதாக அடிக்க வேண்டும். கோதுமை மாவுடன் பழச்சாறு, விழுது சேர்த்து, ஆப்ப சோடா, உப்பு போட்டு நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைக்க வேண்டும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி இட்டு, தோசைக் கல்லில் போட்டு, நெய் தடவி, இருபக்கமும் வேகவைத்து எடுக்க வேண்டும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். பழங்கள் சேர்வதால் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்.

 நான்குவகை பழங்கள் சேர்வதால் சத்துக்கள் மிக்க சப்பாத்தி இது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லாரும் சாப்பிடலாம்.

 ரமா ராமநாதன், நாகர்கோவில்.எனதருமை நேயர்களே இந்த '[சமையல்] மிக்ஸ்ட் புரூட் சப்பாத்தி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News