03 மே 2015

,

[சமையல்] கண்டந்திப்பிலி ரசம்

kandanthippili rasam recipe), thippili Rasam , suvaiyaana rasam seiyya training, tamil cooking recipes


கண்டந்திப்பிலி ரசம் (kandanthippili rasam recipe)

  ரசம் செய்ய தேவையானவை:

  1. கண்டந்திப்பிலி - 50 கிராம்
  2.  மிளகாய் வற்றல் - 2
  3.  மல்லி விதை - 1 மேசைக்கரண்டி
  4.  கடுகு, மிளகு - 1 மேசைக்கரண்டி
  5.  புளி - சிறிது
  6.  உப்பு, பெருங்காயம் தேவைக்கேற்ப.
  7.  சீரகம் - 1/2 மேசைக்கரண்டி, கறிவேப்பிலை.
 செய்முறை விளக்கம்: நீரில் புளியைக் கரைத்து உப்பு கலந்து வைக்கவும்.
kandanthippili rasam recipe
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு, மிளகாய் வற்றல், மல்லி விதை, கண்டந் திப்பிலி, பெருங்காயம் ஆகியவற்றை நன்கு வறுத்து மிக்ஸியில் பொடி பொடியாக்கவும்.

 அடுப்பில் புளிக் கரைசலைக் கொதிக்க விடவும். பின்னர் கடுகு, சீரகம், கறிவேப்பிலையைத் தாளித்துக் கொள்ளவும். கொதி வந்த புளிக் கரைசலில் தயாரித்த பொடியைச் சேர்க்கவும். பிறகு தாளித்த பொருள்களைச்
 சேர்க்கவும். ரசம் நுரையுடன் கொதிக்கும் போது இறக்கவும். சாதத்தில் சேர்த்துச் சாப்பிட உடல் வலி, வாயு, ஜீரணக் கோளாறு நீங்கும்.
 -ஆர்.ரக்ஷனா சக்தி, திருநெல்வேலி. kandanthippili rasam recipe), thippili Rasam , suvaiyaana rasam seiyya training, tamil cooking recipesஎனதருமை நேயர்களே இந்த '[சமையல்] கண்டந்திப்பிலி ரசம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News