13 மே 2015

, ,

இளம் வயதில் முகத்தில் சுருக்கமா..? இதோ சில டிப்ஸ்

Ilam vayathil muga surukkam poga vazhigal, beauty tips in tamil, azhagu kurippugal, thol surukkam poga, mugam azhagu pera tips,

natural cure Face wrinkle for youth, mugam azhagu kurippugal, Beauty tips in tamil

இளம் வயதில் முகத்தில் சுருக்கமா..? இதோ சில டிப்ஸ் ( Ilam vayathil muga surukkam poga vazhigal, natural cure for youth Face wrinkle)


இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் “பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது. ஆகவே “பாஸ்ட் புட்’ உணவு வகைகளை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியது அவசியம். இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது?  உண்ணும் உணவு விஷயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்தே
போவது உறுதி. இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:

காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள்: இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விட்டமின்கள் மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.

ஆரஞ்சு, கரட் ஜூஸ்:
வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.

துவர்ப்பு: துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், நெல்லிக்காய், வாழைத்தண்டு போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வெந்தயக் கீரை: வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேக வைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய்: நல்லெண்ணெய், பாதாம்
எண்ணெய்  இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊற விட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.

கறிவேப்பிலை:
கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும்.
அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாமே.

முகத்தில் சுருக்கம் என்ற கவலை இனியுமேன்?
 Ilam vayathil muga surukkam poga vazhigal, beauty tips in tamil, azhagu kurippugal, thol surukkam poga, mugam azhagu pera tips,  Wrinkle free skin, natural cure Face wrinkle for youthஎனதருமை நேயர்களே இந்த 'இளம் வயதில் முகத்தில் சுருக்கமா..? இதோ சில டிப்ஸ்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News