ஆண்களின் தலை வழுக்கையாவதை தடுக்க சில வழிகள்.. | Tamil247.info

ஆண்களின் தலை வழுக்கையாவதை தடுக்க சில வழிகள்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Aangal thalai vazhukkai vizhaamal thadukka sila vazhugal.. 

how to control baldness health tips in tamil
 வழுக்கை தலையாவதை தடுக்க, முடி ஆரோக்கியமாகவும், முடி உதிராமலும் இருக்க செய்யவேண்டியவைகள்.

தினமும் ஷாம்பு போடுங்கள்:
  தினமும் தலைக்கு ஷாம்பு போடுவது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உண்மை தான். ஆனால் அது கெமிக்கல் அளவுக்கு அதிகமாக உள்ள ஷாம்பு வைப் பயன்படுத்தினால் தானே தவிர, கெமிக்கல் மிகவும் குறைவாக உள்ள ஷாம்புவைக் கொண்டு தினமும் தலைக்கு குளித்தால், தலையில் உள்ள அழுக்குகள் மற்றும் வியர்வை நீக்கப் பட்டு, ஸ்கால்ப் ஆரோக்கியமாக முடி வளர்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.

முடியை தேய்த்து துடைக்க வேண்டாம்: ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, தலை குளித்து முடித்த உடன், டவலைக் கொண்டு கடுமையாக தேய்ப்பார்கள். ஏன் என்று கேட்டால், அப்போது தான் சீக்கிரம் முடி காயும் என்பார்கள். ஆனால் அப்படி துணியால் தேய்த்தால், நீரில் ஊறியதால் வலிமையின்றி இருக்கும் மயிர் கால்கள் தேய்க்கும் போது கையோடு எளிதில் வந்து விடும். எனவே எப்போதும் முடியை கடுமையாக தேய்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். இதனால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

கெமிக்கல்களை தவிர்க்கவும்:
ஹேர்ஸ்டைல் செய்கிறேன் என்று பல ஆண்கள் ஹேர் ஜெல்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இப்படி கெமிக்கல் கலந்த ஹேர் ஜெல்லை முடிக்கு அதிகம் பயன்படுத்தினால், முடி உதிர்வது அதிகரித்து, முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, விரைவில் வழுக்கை கூட விழும் வாய்ப்புள்ளது.

இறுக்கமான தொப்பி:
வெயிலில் செல்லும் போது, ஆண்கள் தொப்பி அணிந்து செல்வார்கள். ஆனால் நீண்ட நேரம் மிகவும் இறுக்கமான தொப்பியை அணிந்தால், காற்றோட்ட மில்லாமல் தலையில் அதிகம் வியர்த்து, மயிர் கால்கள் வழு விழந்து, அதன் மூலம் முடி அதிகம் கொட்டும். எனவே தொப்பி அதிகம் அணிவதைத் தவிர்த்திடுங்கள். அப்படியே அணிந்தாலும், நீண்டநேரம் அணிவதைத் தவிருங்கள்.

ஹெல்மெட்: நீங்கள் பைக்கில் செல்பவராக இருந்தால், ஹெல்மெட் அணியும் போது, தலைக்கு காட்டன் துணியை கட்டிக்கொண்டு, பின் ஹெல்மெட் அணியுங்கள். இதனால் வியர்வையை துணி உறிஞ்சிவிடும். இதன் மூலம் முடியின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை:
உங்களின் வாழ்க்கை முறையை உங்கள் முடியை வெளிப்படுத்தும். அதிலும் நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, மன அழுத்தமின்றி வாழ்ந்து வந்தால், அது உங்களின் முடியில் பிரதிபலிக்கும். அதுமட்டுமின்றி, தினமும் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டு வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, உங்கள் முடிக்கும் நல்லது.

vazhukai thalai, sotta thalai thadukkum vazhigal,aangal mudi kottuvadhai niruttha, aangalin mudi udhirvadhai nippaatta sil vazhigal, natural ways to stop hair loss, some tips for hair care for men, shampoo, hair jel,Aangal thalai vazhukkai vizhaamal thadukka sila vazhugal, Natural ways to stop hair loss among men, hair care tips in tamil, aadavar mudi kottum thollai
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ஆண்களின் தலை வழுக்கையாவதை தடுக்க சில வழிகள்.. ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ஆண்களின் தலை வழுக்கையாவதை தடுக்க சில வழிகள்..
Tamil Fire
5 of 5
Aangal thalai vazhukkai vizhaamal thadukka sila vazhugal..   வழுக்கை தலையாவதை தடுக்க, முடி ஆரோக்கியமாகவும், முடி உதிராமலும் இருக்க செய்ய...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News