20 மே 2015

,

என்னாது, மேகி நூடுல்சுக்கு தடையா..?

2-minute Maggi noodles banned in UP and Rajasthan, India ban noodles as it contains excessive monosodium glutamate (MSG), 'Maggi' contains high amount of 'monosodium glutamate

2-minute Maggi noodles ban excess monosodium glutamate (MSG) content
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாக நூடுல்ஸ் உள்ளது. நூடுல்ஸ் தயாரிப்பில் பெயர்போனது மேகி. ஆனால் இந்த மேகி நூடுல்ஸ்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதால் இதனை தடை செய்வது குறித்து பல்வேறு இந்திய மாநிலங்கள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப் பட்ட மேகி மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதனை செய்த போது அதில் மோனோசோடியம் க்ளூடமேட் (MSG) அளவுக்கு மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.


உணவுப் பண்டங்களில் ருசியை அதிகரிக்க குறிப்பாக சீன வகை உணவுகளில் இந்த எம்எஸ்ஜி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அனுமதிக்கப்பட்ட அளவு 0.01 பிபிஎம், ஆனால் மேகியில் இருப்பது 17 பிபிஎம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் அதிகமாக இருப்பது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசாயனம் அடங்கிய உணவுப் பொருளை அடிக்கடி சாப்பிட்டால் குறிப்பாக குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு, மூளை சேதம், கல்லீரல் அழற்சி மற்றும் வேறு ஆரோக்கிய கேடுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதனால் மேகி நூடுல்சை தயாரித்து வரும் பிரபல நிறுவனமான நெஸ்லேவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது லக்னோ உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து மேலாண்மை துறை. மேலும் நாடு முழுவதும் மேகி பாக்கெட்களை சேகரித்து உரிய தர பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2-minute Maggi noodles  banned in UP and Rajasthan, India ban noodles as it contains excessive monosodium glutamate (MSG),  'Maggi' contains high amount of 'monosodium glutamate, noodles udambirkku kedu vilaivikkum unavu porul, preservative, food chemical in noodles, causes brain damage, liver dis-function, body weight raise among kids, Bad impacts of eating maggi noodlesஎனதருமை நேயர்களே இந்த 'என்னாது, மேகி நூடுல்சுக்கு தடையா..? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News