15 மார்ச் 2015

அழகிய வீடு விற்ப்பனைக்கு வீட்டை வாங்குபவர்களுக்கு மனைவியும் இலவசம்...

Wife free for buying house advertisement in Indonesia | Veedu vaanginaal manaivi ilavasam vinodha vilambaram

Wife free for buying house advertisement in Indonesia | Veedu vaanginaal manaivi ilavasam vinodha vilambaram

Wife free for buying house advertisement in Indonesia Veedu vaanginaal manaivi ilavasam vinodha vilambaram
வீடு விற்பனை செய்வதற்காக வெளியான விளம்பரம் இணையதளங்களில் பிரபலமடைந்து வருகிறது..

வீட்டை வாங்கினால், கூடவே வீட்டின் தற்போதைய உரிமையாளர் வினா லியாவை திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுதான் இந்த பரபரப்பிற்கு காரணம்.

40 வயதாகும் வினா லியா, ஜாவா தீவிலுள்ள இரண்டு படுக்கை அறைகள், கார் பார்கிங் வசதிகள், மீன் குளம் ஆகிய வசதிகளை கொண்ட தனது வீட்டை 75,000 டாலர்களுக்கு (சுமார் ரூ.47 லட்சம்) விற்பனை செய்வதற்காக அளித்துள்ள விளம்பரத்தில்தான் இந்தச் "சலுகை' இடம் பெற்றுள்ளது.

இந்த விளம்பரத்தைப் பார்த்து வியப்படைந்த இந்தோனேசிய இணையதளவாசிகள், உடனடியாக
இதனை தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள, அது காட்டுத் தீபோல் இணைய தளங்களில் பரவியது.

சமூக வலைதளங்களில், "வினா லியா ஒரு அதிபுத்திசாலி. வீட்டை விற்பனை செய்தாலும், தொடர்ந்து உரிமையாளராக நீடிக்கவே லீனா இந்த விளம்பரத்தைக் கொடுத்துள்ளார்'' என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

எனினும் இதுகுறித்து வினா லியா கூறியதாவது:

எனது விளம்பரத்தைப் பார்த்து ஊடகங்களைச் சேர்ந்தவர்களும், அது சரியான விளம்பரம்தானா என்பதை உறுதிப்படுத்த போலீஸாரும் வந்தது திகைப்பை ஏற்படுத்தியது. உண்மையில் அந்த விளம்பரத்தை நான் அளிக்கவில்லை.

வீடு, மனைகள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள எனது தோழியிடம் வீட்டை விற்றுத்தரச் சொன்னேன். இணையத்தளங்களில் எல்லாம் நான் பதிவு செய்யக் கூறவில்லை. வீடு வாங்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர், மனைவியை இழந்தவர்கள், மனைவியைத் தேடுபவர்கள் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

ஆனால், அவர் இரண்டையும் சேர்த்து விளம்பரம் தருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் எனது விளம்பரத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது..

என்றார் அவர்.

 Indonesia Wife free for buying house advertisement in Indonesia
Wife free for buying house advertisement in Indonesia | Veedu vaanginaal manaivi ilavasam vinodha vilambaramஎனதருமை நேயர்களே இந்த 'அழகிய வீடு விற்ப்பனைக்கு வீட்டை வாங்குபவர்களுக்கு மனைவியும் இலவசம்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News