31 மார்ச் 2015

,

நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களுக்கு மலிவு விலை ஸ்கூட்டர்..!

Maatru thiranalugalukku Malivu vilai scooter | Low price scooter for Muscular Dystrophy patients as well as old age people

Maatru thiranalugalukku Malivu vilai scooter | Low price scooter for Muscular Dystrophy patients as well as old age people

Maatru thiranalugalukku Malivu vilai scooter | Low price scooter for Physically impaired
நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களுக்கு  மலிவு விலை ஸ்கூட்டர்!

சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் நைதுருவன். இவர் மஸ்குலர் டைஸ்ட்ரோபி (Muscular Dystrophy) என்ற குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி.  மஸ்குலர் டைஸ்ட்ரோபி  என்பது மெல்ல மெல்ல கால்களை வலுவிழக்கச் செய்து எழுந்து நடமாட முடியாமல் செய்துவிடும். இது எந்த வயதில் முற்றிலும் நடமாட்டத்தை நிறுத்தும் என்பதும் யாருக்கும் தெரியாத ஒன்று.  அவரது 20வது வயதில் சுத்தமாக கால்கள் செயலிழந்து, நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. தன்னைப் போல் நடக்க முடியாதவர்களுக்காக இந்த வண்டியைத் தயார் செய்து மார்க்கெட்டில் விடவேண்டும் என்பதே நைதுருவனின் லட்சியம்.

இவரால் சிறு சிறு வேலைகளைக் கூட மற்றவரின் உதவி இல்லாமல் செய்ய முடியாது. இந்நிலையில் உடல்வேறு சற்று பருத்துப் போனதால் அவரால் வீல் சேரிலும் உட்கார முடியாத நிலை. இதனால் மாற்று திறனாளிகள் உபயோகப்படுத்தும் மோட்டார் வண்டியை வாங்க முயற்சி செய்தார்.

ஆனால் வண்டி விலை ரூ.80,000 முதல் ரூ.2 லட்சம் வரை இருந்தது. அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியவில்லை. இதற்கிடையில் அவருடைய அப்பா என்ஜினீயர் என்பதால் அவருக்காக  பேட்டரியில் இயங்கும் சிறிய வடிவிலான ஒரு வண்டியைத் தயார் செய்து ஓட்டிக் கொண்டிருந்தார். அதற்கு ஒரு ஸ்பேரும் வைத்திருந்தார். அதனை இவர் எடுத்துக் கொண்டார். திடீரென்று அவருக்கு ஓர் எண்ணம் வந்தது. தன்னைப் போல் நடக்க முடியாதவர்களுக்கு இந்த வண்டி மிகவும் உபயோகமாக இருக்குமே. இதையே ஏன்? ஒரு தொழிலாக எடுத்துச் செய்யக்கூடாது என்று.

அதுவரை அவர்கள் வீட்டினுள்ளேயே ஓடும் படியான மினி ஸ்கூட்டரைத்தான் தயார் செய்து வைத்திருந்தார். அதன்பிறகு சாலையில் ஓட்டுவதற்கான வண்டியைத் தயார் செய்தார். அதில் வெற்றியும் கிடைத்தது.  இந்த வண்டியின் மூலம் 6 முதல் 7 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். இது கார், ஸ்கூட்டர்களில் உபயோகப் படுத்தும் பேட்டரியின் மூலம் தயார் செய்தது.  இதற்கு பெட்ரோல் தேவையில்லை. பேட்டரியை எட்டு மணிநேரம் போன் சார்ஜ் செய்வது போல் சார்ஜ் செய்தால் போதும். இதற்கு ரூ.20,000 வரைதான் செலவு ஆகிறது.  இந்த வண்டியை மால்ஸ், ரிசார்ட், கோவில்கள் என வீல் சேர் எங்கெல்லாம் உபயோகப் படுத்த முடியுமோ அங்கெல்லாம் உபயோகப் படுத்தலாம். மேலும் இதனை மாற்றுத் திறனாளிகள் மட்டும் இல்லாமல் நடக்கச் சிரமப்படும் முதியவர்களும் உபயோகப் படுத்தலாம். 60 வயது வரை நன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென்று வீல் சேரில் அமர வேண்டும் என்றால் அவர்கள் மன தளவில் பாதிக்கப் படுவார்கள். அவர்களுக்கு இந்த ஸ்கூட்டரைக் கொடுத்து ஓட்டச் சொன்னால் இது மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

Reference: dinamani.com Maatru thiranalugalukku Malivu vilai scooter | Low price scooter for Muscular Dystrophy patients as well as old age people, low cost wheel chair for handicapped persons, Scooter for Muscular Dystrophy patients, Cheap chair cum bike for handicap person, nadakka mudiyaamal avadhi paduvorukku malivu vilai cycle, vayadhaana mudhiyavargal otta iru sakkara vaaaganamஎனதருமை நேயர்களே இந்த 'நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களுக்கு மலிவு விலை ஸ்கூட்டர்..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News