நீரிழிவு நோய்க்கு தகுந்த உணவு | Tamil247.info

நீரிழிவு நோய்க்கு தகுந்த உணவு

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Neerilivu noikku unavu kattuppadu - நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு

Neerilivu noikku unavu kattuppadu, sarkkarai noi, sakkarai viyadhi நீரிழிவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியுமே  அல்லாமல் முழுவதுமாகக் குணப்படுத்த இயலாது. இதைக் கட்டுப்பாடடிற்குள் வைத்திருந்தால் சிறுநீரகம், கண், இரத்தக் குழாய் போன்ற உறுப்புகளின் பாதிப்பைத் தவிர்க்க முடியும். இதற்கு உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி, மருந்துகள் ஆகியவை உதவுகின்றன.

உணவுக் கட்டுப்பாடு நீரிழிவு சிகிச்சை முறையில் முதலிடம் வகிக்கின்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசி உணைவத் தவிர்த்து கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் மட்டுமே உண்ண வேண்டும் என்று தேவையில்லை எந்த வகையான தானியம் உட்கொள்கிறோம் என்பதை விட எந்த அளவிற்கு உட்கொள்கிறோம் என்பதே முக்கியமாகும்.

குறிப்பிட்ட உணவு வகைகள் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.

**உணவு உண்ணாமலிருப்பது, அளவிற்கு மேல் உண்பது இரண்டுமே கூடாது. 

தவிர்க்க வேண்டிய உணவு வைககள்: இனிப்புகள், தேன்,  வெல்லம், சர்க்கரை கலந்த பலகாரங்கள். கேக், பிஸ்கெட், ஐஸ்கிரீம்.
வெண்ணெய், நெய், பொரித்த உணவு வகைகள். மதுபானங்கள், குளிர்பானங்கள், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா. உலர்ந்த பழ வகைகள், கொட்டைப் பருப்பு (முந்திரி, பாதாம், பிஸ்தா). எண்ணெயில் தயாரித்த ஊறுகாய், வாழைப்பழம், அசைவ உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதை தினமும் சாப்பிட்டால் எடை குறையாது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவும் குறையாது. எனவேதான் வாரம் ஒருமுறைக்கு  மேல் அசைவ உணவு சாப்பிடுவைதத் தவிர்க்க வேண்டும்.

தாராளமாக சாப்பிடக் கூடியவை: கீரை  வகைகள், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய், புடலங்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், குடைமிளகாய், பப்பாளிக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, தக்காளி, சௗெசௗெ, அவரைக்காய், முட்டைக்கோஸ், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா, காய்கறி சூப், எலுமிச்சை.

சாப்பிடக் கூடிய பழவகைகளின் அளவு: சாத்துக்குடி - 1, ஆரஞ்சு - 1, கொய்யா - 1, ஆப்பிள் - அரை, திராட்சை - 15, பிளம்ஸ் - அரை, தற்பூசணி - 1 பெரிய துண்டு,  மாதுளை - அரை, பலா - 3 சுளைகள், அன்னாசி - 2 சிறிய துண்டுகள், பப்பாளி - 1 பெரிய துண்டு.

சரியான உணவு:
உணவுக் கட்டுப்பாடு என்பது நீரிழிவு நோயாளியின் உயரத்திற்கும், எடைக்கும், செய்யும் தொழிலுக்கும் ஏற்ப கணக்கிடப்படுகிறது.

காலை 6 மணி: காபி அல்லது தேநீர் 1 கப், சர்க்காரை இல்லாமல்.

காலை 8 மணி: இட்லி - 4, அல்லது தோசை - 4 அல்லது சப்பாத்தி - 4 அல்லது இடியாப்பம் - 4, உடன் சட்னி அரை கப் அல்லது ரொட்டி 4 துண்டுகள்.

முற்பகல் 11 மணி: மோர் அல்லது தக்காளி அல்லது பருப்பு அல்லது காய்கறி சூப் அல்லது 1 டம்ளர் எலுமிச்சை சாறுடன் வெள்ளரிக்காய் - 1 கப்.

பகல் 1 மணி: சோறு - 2 கப், சாம்பார் 1/4 கப், கீரை - 1 கப், காய்கறி - 1/2 கப், ரசம் - 1 கப், கோழி - 75 கிராம் அல்லது கறி - 50 கிராம் அல்லது மீன் - 75 கிராம் அல்லது முட்டை வெள்ளைக்கரு அல்லது சுண்டல் 1/4 கப்.

மாலை 5 மணி: காபி அல்லது தேநீர் - 1 கப் (சர்க்கரை இல்லாதது), வடை - 1
அல்லது மாரி பிஸ்கட் - 2.

இரவு 8 மணி: காலை அல்லது மத்தியானம் சாப்பாடைப் போல் பாதி அளவு.

இரவு 10 மணி: பால் அரை கப், பழம் சிறியது - 1.
Neerilivu noikku unavu kattuppadu - நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு #diabeticsfoods #tamilhealth sarkkarai noi, foods for sugar patient, best food control tips for sugar control, neerizhivu noikku unavu kattuppadugal, kaalai unavu, madhuya unavu, iravu unavu, maalai unavu, sappida vendiya palangal, vellam, cake, biscut, ice cream unavu muraigal, thavirkka vendiya unavu , sarkkarai noi, sakkarai viyadhi unavugal,
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'நீரிழிவு நோய்க்கு தகுந்த உணவு ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
நீரிழிவு நோய்க்கு தகுந்த உணவு
Tamil Fire
5 of 5
Neerilivu noikku unavu kattuppadu - நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு நீரிழிவை கட...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News