24 பிப்ரவரி 2015

,

[சமையல்] பைன் ஆப்பிள் ரசம்

Pineapple rasam samayal seimurai | Annasi Pazham recipes

Pineapple rasam samayal seimurai | Annasi Pazham recipes

அன்னாசிப்பழ ரசம்
 செய்ய தேவையான பொருட்கள்:
 1.  தக்காளிப்பழம் -5
 2. பச்சை மிளகாய் -5
 3.  நெய் - 2 தேக்கரண்டி
 4.  கடுகு - 1 தேக்கரண்டி
 5.  இஞ்சி - 1 துண்டு
 6.  சர்க்கரை - சிறிதளவு
 7.  அன்னாசிப்பழம் - 1
 8.  எலுமிச்சம்பழம் - 1
 9.  கொத்தமல்லி - 1 பிடி
 10.  துவரம்பருப்பு - 100 கிராம்
 11.  உப்பு - சிறிதளவு
Pineapple rasam samayal seimurai | Annasi Pazham recipes செய்முறை: அன்னாசிப் பழத்தின் தோலைச் சீவிய பிறகு பாதியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாதியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மற்றொரு பாதியை நன்றாக ஜூஸ் வரும் வகையில் துருவிக் கொள்ள வேண்டும். தக்காளிப் பழங்களைப் பிழிந்து தனியாக ஒரு பாத்திரத்தில் ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பைனாப்பிள் துண்டுகளோடு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் சமயத்தில் தேவையான அளவு உப்பு, நறுக்கிய சிறிய இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் இவற்றுடன் ஒரு சிட்டிகை சர்க்கரையும் சேர்த்துவிட வேண்டும். இதை கொஞ்சம் கொதிக்க விட்டு தக்காளி ஜூஸ்  சேர்க்க வேண்டும். துவரம் பருப்பை வேகவைத்து மசித்து அதில் துருவிய பைனாப்பிள் ஜூஸ் பிழிந்து இரண்டையும் ரசத்தில் விட்டு கொஞ்சம் கொதிக்க விட்டு இறக்கிவிட வேண்டும். நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டி எலுமிச்சம் பழச்சாறு, கொத்தமல்லி சேர்த்தால் பைனாப்பிள்(அன்னாசிப்பழ) ரசம் ரெடி.

-ஆர்.ஜெயலெட்சுமி,
 திருநெல்வேலி டவுண்.
Pineapple rasam samayal seimurai | Annasi Pazham recipes, tamil recipes book, tamilnadu samayal seimurai, #tamilrecipes #tamilnadusamayalஎனதருமை நேயர்களே இந்த '[சமையல்] பைன் ஆப்பிள் ரசம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News