24 பிப்ரவரி 2015

,

[சமையல்] ஓட்ஸ் பொங்கல்..

oats pongal samayal recipe in tamil

oats pongal samayal recipe in tamil

ஓட்ஸ் பொங்கல்

 செய்ய தேவையான பொருட்கள்:

 1. ஓட்ஸ் 1 கப்
 2. பயித்தம் பருப்பு 1/4 கப்
 3. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
 4. மிளகு 10
 5. சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
 6. இஞ்சி 1 துண்டு
 7. முந்திரிபருப்பு 10
 8. நெய்  1 மேசைக்கரண்டி
 9. பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
 10. நெய் 2 மேசைக்கரண்டி
 11. கருவேப்பிலை ஒரு கொத்து
 12. உப்பு தேவையான அளவு

 ஓட்ஸ் பொங்கல் செய்முறை விளக்கம்:

 oats pongal samayal recipe in tamil
பயித்தம் பருப்பை அரை கப் தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் நன்றாக குழைய வேக வைக்க வேண்டும்.

ஒரு microwave bowl' ல்  ஒரு கப் ஓட்ஸுடன் ஒன்றரை (1 1/2) கப் தண்ணீர் விட்டு "H" ல் ஐந்து நிமிடம் வைத்தால் ஓட்ஸ் நன்றாக வெந்துவிடும்

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் வேக வைத்த பயித்தம் பருப்பு, வெந்த ஓட்ஸ் தேவையான உப்பு மூன்றையும் சேர்த்து கிளற வேண்டும்.அதனுடன் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக மிக்ஸியில் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும். பெருங்காயத் தூள், கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும். முந்திரிப் பருப்பை நெய்யில் பொரித்துப் போடவும். கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.

நார்சத்து மிகுந்த, சத்து நிறைந்த உணவு இந்த ஓட்ஸ் பொங்கல்.

-  மிராவின் கிச்சன் (annaimira.blogspot. com)
[சமையல்] ஓட்ஸ் பொங்கல்.. oats pongal samayal recipe in tamilஎனதருமை நேயர்களே இந்த '[சமையல்] ஓட்ஸ் பொங்கல்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News