25 பிப்ரவரி 2015

,

[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்திருக்கும் புகைப்படத்தை வாட்ஸப்பில் வெளியிட்ட மாணவர்கள்..

whatsapp picture of a boy on his girlfriends lap

whatsapp picture of a boy on his girlfriends lap
மங்களூரு அருகே உள்ள சூரத்கல் பகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் முகமது ரியாஷ்(20). இவர் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முகமது ரியாஷ் தனது கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளின் மடியில் படுத்து கிடப்பது போன்ற படத்தை வாட்ஸப்பில் வெளியிட்டனர். இந்த சர்ச்சைக் குரிய புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த 21ம் தேதி முகமது ரியாஸ் தனது வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டுக்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல்  முகமது ரியாஸை அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு கடத்திச் சென்று தாக்கிச் சென்றனர். இதில் காயம் அடைந்த முகமது ரியாஸ், மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே  முகமது ரியாஸ் சூரத்கல் காவல் துறையில் புகார் செய்தார். புகாரில் வாட்ஸ் அப்பில் என்னுடன் பயிலும் 5 மாணவிகளின் மடியில் நான் படுத்து இருப்பது போல படம் சித்தரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இருப்பது நான் அல்ல. எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முகமது ரியாஸ் படிக்கும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிட்டதாக கூறி அந்த கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.

whatsapp picture of a boy on his girlfriends lap, tamil news daily, whatsapp picture issue, News about whatsapp imageஎனதருமை நேயர்களே இந்த '[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்திருக்கும் புகைப்படத்தை வாட்ஸப்பில் வெளியிட்ட மாணவர்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News