07 டிசம்பர் 2014

, , ,

கடலில் மீன் பிடிப்பவர்கள் தவறி எல்லை தாண்டி செல்வதை எச்சரிக்கும் புதிய மொபைல் 'ஆப்'..

Save Our Race (SOR) Life Saving Android App to help Tamilnadu Fishermen warns while crossing national sea border between india srilanka, Save our Race (SOR) android apps for Indian fishermen by Resington

Save Our Race (SOR) Life Saving Android App to help Tamilnadu Fishermen warns while crossing national sea border between india srilanka | #sorandroidapp #Saveourrace #Resington | Download SOR android app for FREE

கடலில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான கண்ணுக்கு தெரியாத எல்லைக் கோடு ஐக்கிய நாடுகள் அமைப்பால் இரு நாடுகள் முன்னிலையில் கடந்த 1974-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டது. இந்த எல்லைக்கோடு 1095 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. அதாவது 591 கடல் மைல் தொலைவு ஆகும்.
Save our Race (SOR) android apps for Indian fishermen by Resington
Save our Race (SOR) android apps for Indian fishermen by Resington

எல்லைக்கோடு கண்ணுக்கு தெரியாததால் மீனவர்கள் அதனை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அதனை போக்கும் வகையில் தூத்துக்குடியை சேர்ந்த என்ஜினீயர் ரெசிங்டன் என்பவர் சேவ் அவர் ரேஸ்' சுருக்கமாக எஸ்.ஓ.ஆர். (SOR mobile app) என்னும் புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளார்.

Click on image to ZOOM:
          

  

மீனவர்கள் தங்களை அறியாமல் இந்திய எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லும் போது, அவர்களுக்கு இந்த மொபைல் 'ஆப்' மென்பொருள் எச்சரிக்கை செய்கிறது. இந்த மொபைல் 'ஆப்' இயங்குவதற்கு இணையதள(internet) வசதியோ, செல்போன் சிக்னலோ(signal) இருக்க வேண்டிய அவசியம் இல்லை. GPS மூலம் இணைக்கப்பட்டு உள்ள இந்த மென்பொருள் ஆப்லைனிலும்(offline) வேலை செய்யும்.

மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடல் எல்லைக்கு முன்பாக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் எச்சரிக்கை கோடு அமைக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தை மீனவர்களின் படகு அடையும் போது, அவர்கள் வைத்திருக்கும் ஆண்ட்ரைடு மொபைலில் மஞ்சள் வண்ணத்தில் எச்சரிக்கை அறிவிப்பும், எச்சரிக்கை ஒலியும் எழுப்பும். இதனால் மீனவர் விழிப்படைந்து படகை திருப்பிவிடலாம். அதை அவர் அலட்சியப் படுத்தி மேலும் நகர்ந்து கடலில் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் போது, சிவப்பு வண்ணத்தில் "வெளியே' என எச்சரிக்கையுடன் கூடிய ஒலியினை எழுப்பும்.

ஆபத்து என்ற சமயத்தில் மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபாயக் குரலாக குறுந்தகவல் அனுப்புவதற்கான வசதியும் இந்தச் செயலியில் உள்ளது. இதற்க்கு மட்டும் அவர்கள் மொபைல் போனில் சிக்னல் தேவைப்படும். இது மீனவர்களை துன்பங்களில் இருந்து காக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்றார் என்ஜினீயர் ரெசிங்டன்.

Click install to download the Application..
 install SOR Save our race application for FREE
Save Our Race (SOR) mobile apps to help Tamilnadu Fishermen about national sea border between india srilanka, national sea border india srilanka save our race android app alerts while crossing borders, install SOR application in google play store, download Save our race android application from GOogle play store, Meenavargal paadhugappaaga irukka mobile menporul, Free download tamilaga meenavargalin paadhugaavalan, meenavargal padhugappu, useful android applications, social service, #dailytamilnews #sorandroidapp #Saveourrace #Resingtonஎனதருமை நேயர்களே இந்த 'கடலில் மீன் பிடிப்பவர்கள் தவறி எல்லை தாண்டி செல்வதை எச்சரிக்கும் புதிய மொபைல் 'ஆப்'..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News