லிங்கா - விமர்சனம் | ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, சந்தானம் | Tamil247.info
Loading...

லிங்கா - விமர்சனம் | ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, சந்தானம்

Lingaa movie review in tamil | Super star Rajini, Anushka, Sonakshi, Santhanam

Lingaa movie review in tamil | Super star Rajini, Anushka, Sonakshi, Santhanam
Lingaa movie review in tamil / Lingaa vimarsanam
நடிப்பு : ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, சந்தானம், ஜெகபதி பாபு
இயக்கம் : கே.எஸ்.ரவிகுமார்

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : ரத்னவேலு
எடிட்டிங் : சம்ஜித்
தயாரிப்பு : ராக்லைன் என்டர்டெயின்மென்ட்ஸ்
Release Date: 12 Dec 2014 (12-12-2014) 

ரஜினியின் மகள் தயாரித்த கோச்சடையான் படத்திற்கு பிறகு பெரும் எதிர்ப்பார்ப்புடன் வந்துள்ள அடுத்த படம் இந்த லிங்கா.

படத்தின் முதல் காட்சில் சூப்பர்ஸ்டார் தோற்றம் அசத்தலாக இருக்கிறது. முதல் காட்சியிலேயே கிராபிக்ஸ் கலந்து மிரட்டியிருக்கிறார்கள்.  முதல் பாதி நல்ல நகைச்சுவையுடன் செல்கிறது. இடைவேளைக்கு பிறகு தான் படத்திற்கு தேவையான திரைக்கதை இருக்கிறது.

லிங்கா கதை என்ன?

லிங்கேஷ்வரன் என்ற ரஜினி சில திருட்டு வேலைகள் செய்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார். ரஜினியின் நண்பர்களாக சந்தானமும், கருணாகரனும் வருகின்றனர். ஒருதிருட்டின்போது அனுஷ்காவிடம் மாட்டிக்கொள்கிறார் ரஜினி. இதை வைத்து ரஜினியை மிரட்டி தன் ஊருக்கு வரவைக்கிறார் அனுஷ்கா

இடைவேளையில் ஒரு திருப்பம் வருகிறது. அதில் ரஜினி தான் யாரென்று தெரிந்து கொள்கிறார். பிறகு பிளாஷ்பேக் காட்சிகளில் தாத்தா ரஜினி, சோனாக்ஷி சின்ஹா வின் கதை ஓடுகிறது.

முதல் பாதி அனுஷ்கா, சந்தானம், கருணாகரன் என்று ரஜினியுடன் பின்னி எடுக்க நல்ல வேகத்தில் படம் செல்கிறது. கொஞ்சம் கதையுடன் முதல் பாதி நல்ல நகைச்சுவையுடன் செல்கிறது.
பிற்பாதி கொஞ்சம் வலுவான திரைக்கதையுடன் இருக்கிறது. டிரைலரில் பார்த்த அந்த அணையை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கைமுறையை கனமான கதையம்சத்துடன் கூறியுள்ளார் இயக்குனர்.

சூப்பர்ஸ்டார் வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்துகொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். ரயில் சண்டைக்காட்சியிலும் படத்தின் கடைசியில் வரும் ராட்சத பாலூன் சண்டையிலும் பின்னி எடுத்துள்ளார் சூப்பர்ஸ்டார்.

‘படையப்பா’விற்குப் பிறகு கிட்டத் தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்திருக்கிறது ரஜினி, கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி.

முத்து’, ‘படையப்பா’வைப் போல் தலைவர் இதிலும் அதகளம் பண்ணியிருப்பார் என்ற எதிர் பார்ப்போடு ‘லிங்கா’விற்கு வர வேண்டாம். ஏனென்றால் இந்த ‘லிங்கா’வின் கதைக் களம் வழக்கமான ரவிகுமார் படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது. அதோடு ரஜினியின் உடல் நிலையும் 15 வருடங்களுக்கு முன்பி ருந்ததைப்போல் இப்போது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும்... ‘ராஜா லிங்கேஸ்வரனு’க்காக நிச்சயம் ஒரு ‘விசிட்’ அடிக்கலாம்.

லிங்கா ஒரு வரி விமர்சனம்
ரஜினி ரசிகர்களுக்கு - MASS
நடு நிலை ரசிர்கர்களுக்கு - OK PASS PASS
ரஜினியை பிடிக்காதவர்களுக்கு - One time seeing NO LOSS.

லிங்கா படத்தை பற்றி யூட்யூப் பிரபலங்களின் விமர்சனங்களை காண்போம்:
 Lingaa movie review in tamil
 Lingaa movie review in tamil
 Lingaa movie review in tamil

lD93LdoN6nE https://www.youtube.com/watch?v=n1IVj0w57hM Lingaa movie review in tamil | Super star Rajini, Anushka, Sonakshi, Santhanam famous tamil movie reviews , lingaa story, lingaa performance, Lingaa vimarsanam, super star rajini kanth's Lingaa cinema vimarsanam, tamil film review videos, LIngaa latest review
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'லிங்கா - விமர்சனம் | ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, சந்தானம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
லிங்கா - விமர்சனம் | ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, சந்தானம்
Tamil Fire
5 of 5
Lingaa movie review in tamil | Super star Rajini, Anushka, Sonakshi, Santhanam Lingaa movie review in tamil / Lingaa vima...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment