தாலி கட்டிய மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்.. | Tamil247.info

தாலி கட்டிய மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Husband sends his wife with her lover in their first night..

Husband sends his wife with her lover in their first night, tamil news paper 

திருச்சி துறையூரில் திருமணம் செய்த பெண் வேறொருவரைக் காதலித்ததால் முதலிரவில் அப் பெண்ணை காதலருடன் அனுப்பி வைத்துள்ளார் புது மாப்பிள்ளை. திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேவி(22). துறையூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நந்த குமார்(26).

இருவருக்கும் திருமணம் செய்ய கடந்த 20 நாட்களுக்கு முன் நிச்சயம் நடந்தது. அதன்பின் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு இரு வீட்டாரும் விநியோகித்தனர். கடந்த 10 ஆம் தேதி காலை மாப்பிள்ளை வீட்டில் திருமணம் தட புடலாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர். மாலையில் பெண் வீட்டுக்கு மறுவீடு சென்றனர். இரவு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தபின் மண மக்கள் முதலிரவு அறைக்கு சென்றனர். அப்போது திடீரென நந்த குமாரின் காலில் தேவி விழுந்து கதறி அழுதார். அதிர்ச்சி யடைந்த நந்த குமார் மணப் பெண்ணை விசாரித்தார். அப்போது தேவி, "நானும், எங்கள் ஊரை சேர்ந்த லாரி டிரைவரும் காதலித்து வருகிறோம். பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டனர். நான் வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன். என்னை அவருடன் சேர்த்து வைக்கா விட்டால் செத்து விடுவேன்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். நந்த குமாரும் விடிய ,விடிய யோசித்துள்ளார். இறுதியில் காதலனுடன், மனைவியை சேர்த்து வைக்க முடிவு செய்தார்.

மறுநாள் காலை இரு வீட்டாரும் கூடி பேசினர். அப்போது தேவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைப்பது என முடிவானது. திருமண செலவுத் தொகையான 1 லட்சத்தை பெண்ணின் பெற்றோரோ அல்லது காதலனோ நந்த குமார் குடும்பத்துக்கு கொடுத்து விட வேண்டும் எனவும் முடிவு செய்யப் பட்டது. அதன்பின் இதுகுறித்து எழுதி வாங்க துறையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு குடும்பத்தினரும் நேற்று மாலை சென்றனர். ஆனால் இருவரையும் சேர்த்து வைக்க முடியுமே தவிர, தங்களால் பிரித்து வைக்க எழுதி வாங்க முடியாது என்று கூறி போலீசார் அவர்களை திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் இரு குடும்பத்தினரும் பரஸ்பரம் எழுதி வாங்கிக் கொண்டு பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.

இதுகுறித்து வேலை விஷயமாக லாரியில் வெளியூர் சென்றிருந்த தேவியின் காதலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். பின்னர் காதலனுடன் தேவிக்கு நேற்று காலை துறையூர் பெருமாள் மலையடிவாரத்தில் திருமணம் நடந்தது. தாலி கட்டிய மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத்த நந்தகுமாரின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டினர்.

Husband sends his wife with her lover in their first night, vinodha seidhigal, daily tamil news, Latest tamil news #tamilnews thuraiyur news, trichy news, kanavan manaivi, kaadhalittha aanudan than manaiviyai anuppiya kanavan, adhisaya seidhigal, good husband, tamilnadu news
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'தாலி கட்டிய மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
தாலி கட்டிய மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்..
Tamil Fire
5 of 5
Husband sends his wife with her lover in their first night..   திருச்சி துறையூரில் திருமணம் செய்த பெண் வேறொருவரைக் காதலித...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News