08 டிசம்பர் 2014

, , ,

வளர்ப்பு மகனின் திடீர் செக்ஸ் சில்மிஷம்.. ஆசிரியையை கொலை செய்து தானும் தற்கொலை செய்த கொடுமை..!.

Daily Tamil news: Awareness news - Teacher murder case, Annarosi murder case in tamil,

Daily Tamil news: Awareness news - Teacher murder case

(07 Dec 2014) தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார் மடம் அன்னாள் நகரை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் சகாயம். இவரது மனைவி ஜெஸ்மிலா அன்ன ரோசி (வயது 39). அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

ஜெஸ்மிலா அன்னரோசியின் மாமா மகன் ஜான்சிங் (வயது 23). இவர் தட்டார் மடத்தில் டீக்கடை நடத்தி வந்தார். ஜான்சிங்கின் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து விட்டதால் ஜெஸ்மிலா அன்ன ரோசி ஜான்சிங்கை எடுத்து வளர்த்து வந்தார். மேலும் அவர் படிப்பை முடித்ததும் தட்டார் மடத்தில் ஒரு  டீக்கடையும் வைத்து கொடுத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தோணி மைக்கேல் சகாயம் வேலைக்கு சென்று விட்டார். அவரது குழந்தைகள் விளையாட சென்று விட்டனர். வீட்டில் ஜெஸ்மிலா அன்னரோசியும், ஜான்சிங்கும் மட்டும் இருந்தனர்.

அப்போது ஜான்சிங் தனது திடீர் சபல புத்தியில் தன்னை எடுத்து வளர்த்த தாய் என்றும் பாராமல் அவரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். வளர்ப்பு மகன் தன்னிடம் தகாத செயலில் ஈடுபட்டது ஜெஸ்மிலா அன்னரோசிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அவர் ஜான்சிங்கை சத்தம் போட்டு வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அவர் வீட்டை விட்டு செல்லாமல் நடந்த விபரத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அன்னரோசி தனது கணவரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். இது ஜான்சிங்குக்கு சாதகமாக அமைந்து விட்டது.

கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவர் அன்னரோசியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஜான்சிங்  ஈடுபட்டுள்ளார். ஜான்சிங் எல்லை மீறவே ஆத்திரமடைந்த ஜெஸ்மிலா அன்னரோசி நேற்று முன்தினம் தனது கணவரிடம் நடந்த விபரத்தை கூறியுள்ளார்.
Annarosi - Teacher Murder case tamilnadu (awareness news)
Annarosi - Teacher Murder case tamilnadu (awareness news)
அதிர்ச்சியடைந்த கணவர், ஜான்சிங்கை சரமாரியாக திட்டியதோடு இனி மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் வீட்டை விட்டு வெளியேற்றி விடுவேன் என்று கண்டித்துள்ளார். இது ஜான்சிங்குக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் அன்னரோசி மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

நேற்று மாலை வீட்டில் ஜெஸ்மிலாஅன்னரோசி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ஜான்சிங், ஜெஸ்மிலா அன்னரோசியிடம் என்னை உனது கணவரிடம் கூறி அவமானப் படுத்தி விட்டாயே என்று கூறி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே ஆத்திர மடைந்த ஜான்சிங் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து ஜெஸ்மிலாஅன்னரோசியின் தலையில் சரமாரி தாக்கினர்.

இதில் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து ஜான்சிங் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். நேற்றிரவு அந்தோணி மைக்கேல் சகாயம் வீட்டிற்கு வந்தார். அப்போது அன்னரோசி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவரை மீட்டு திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது வழியில் ஜெஸ்மிலாஅன்னரோசி பரிதாபமாக இறந்தார்.

உடனே இது குறித்து அந்தோணி மைக்கேல் சகாயம் தட்டார் மடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெஸ்மிலாஅன்ன ரோசியை, ஜான்சிங்கே அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தப்பி யோடிய அவரை போலீசார் வலைவீசி தேடினர்.

இந்நிலையில் தட்டார் மடம் பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வை யிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது ஜான்சிங் என்பது தெரியவந்தது. ஜெஸ்மிலாஅன்னரோசியை கொலை செய்த அவர், போலீசாருக்கு பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
Annarosi - Teacher Murder case tamilnadu (awareness news), tamil news daily, vinodha seidhigal, paliyal vanmurai, valarppu magan kolai case story, tamil crime story, real life crime news in tamil, #dailytamilnews #tamilnews #latestnewsintamilஎனதருமை நேயர்களே இந்த 'வளர்ப்பு மகனின் திடீர் செக்ஸ் சில்மிஷம்.. ஆசிரியையை கொலை செய்து தானும் தற்கொலை செய்த கொடுமை..!.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News