[சமையல்] காஞ்சீபுரம் இட்லி - சமையல் செய்முறை | Kanchipuram idli | Tamil247.info

[சமையல்] காஞ்சீபுரம் இட்லி - சமையல் செய்முறை | Kanchipuram idli

kanchipuram idli seimurai | kanchipuram idli recipe in tamil

kanchipuram idli seimurai | kanchipuram idli recipe in tamil
என்னமா தினமும் இட்லியா? என்று சலித்துக் கொள்பவர்களுக்கு, காஞ்சீபுரம் இட்லி செய்து கொடுத்தால் நிச்சயம் ஒரு பிடி பிடிப்பார்கள். குழந்தைகளு க்கும், வயதானவர்க ளுக்கும் எளிதில் ஜீரணமாகக் கூடிய கார்போ ஹைட்ரேட் சத்து நிறைந்த உணவு இது. செய்முறை விளக்கம் இதோ...

காஞ்சீபுரம் இட்லி செய்ய தேவையான பொருட்கள்....

1. பச்சரிசி - 1 கப்
2. புழுங்கலரிசி - 1 கப்
3. உருண்டை உளுந்தம்பருப்பு - ஒரு கப்
4. கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
5. கடுகு, உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
6. சீரகம் - 1 டீஸ்பூன்
7. மிளகு - ஒரு டீஸ்பூன்
8. இஞ்சி - சிறு துண்டு
9. ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
10. தேங்காய்ப்பூ - 2 டேபிள் ஸ்பூன்
11. பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
12. நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

காஞ்சீபுரம் இட்லி செய்முறை:

* அரிசி, முழு உளுத்தம் பருப்பை ஒன்றாக ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும், மாவு பொங்கியது ம் ஆப்ப சோடா சேர்த்து கலக்கவும், அத்துடன் நல்லெண்ணெ யை காய்ச்சி ஊற்றவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும், மிளகு, சீரகத்தை உடைத்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

* இத்துடன் இஞ்சியை பொடியாக துருவி சேர்த்து, கறிவேப்பி லை தேங்காய்ப் பூ சேர்த்து நன்றாக வதக்கி மாவில் சேர்க்கவும்.

* நன்றாக கலந்து அகலமான கிண்ணத்தி ல் எண்ணெய் தடவி மாவை முக்கால் பங்கு வருமாறு ஊற்றி குக்கரி ல் வைத்து குக்கர் வெயிட் போடாமல் வேக வைக்கவும்.

* காஞ்சீபுரம் இட்லி ரெடி.

kanchipuram idli seimurai | kanchipuram idli recipe in tamil, காஞ்சீபுரம் இட்லி, vidha vidhamaana idli seiyum murai, pudhu vidha idli, idli vagaigal, tamil recipes, cooking food in tamil, samayal muraigal, kaalai unavu, morning food in tamilnadu, best morning snacks

இந்த '[சமையல்] காஞ்சீபுரம் இட்லி - சமையல் செய்முறை | Kanchipuram idli' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
[சமையல்] காஞ்சீபுரம் இட்லி - சமையல் செய்முறை | Kanchipuram idli
Tamil Fire
5 of 5
kanchipuram idli seimurai | kanchipuram idli recipe in tamil என்னமா தினமும் இட்லியா? என்று சலித்துக் கொள்பவர்களுக்கு, காஞ்...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment