03 நவம்பர் 2014

,

சர்க்கரைக்கு மாற்றான சாக்ரின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா..? அதனை உண்பதன் பின்விளைவுகள் தெரியுமா..?

Artificial sweetener not good for health, Saccharine History and Side effects, Saccharine cause cancer

Artificial sweetener not good for health | Saccharine History and Side effects | Saccharine cause cancer


சர்க்கரைக்கு மாற்றாக பயன்படும் சாக்ரின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா..?
நிலக்கரி. 

நிலக்கரியிலிருந்து ஒருவித வாயுவை உண்டாக்கி விளக்கு எரிக்கப் பயன்படுத்துகிறார்கள். அந்த வாயுவை பிரித்தெடுத்த பிறகு மீதமிருப்பது தாரிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவித ரசாயனப்பொருளே சாக்ரின். இது சர்க்கரையை விட நான்கு மடங்கு அதிக இனிப்புசுவை உடையது. அரை அரிசி எடையுள்ள சாக்கரின் ஒரு கரண்டி சர்க்கரைக்கு சமம்.

சாக்ரினை கண்டுபிடித்தவர்கள் பெயர் 'கான்ஸ்டன்டைன் பால்பெர்க்'. இவர் ஒரு ஜேர்மன் ரசாயன விஞ்ஞானி. 'ஐரா ரெம்சென்' இவர் ரஷ்சிய  விஞ்ஞானி. கண்டுபிடித்த ஆண்டு 1878. 

Artificial sweetener not good for health | Saccharine History and Side effects | Saccharine cause cancer
1901 ஆம் ஆண் டு மான்சாண்டோ  நிறுவனம் சாக்ரின் (SACCHARIN) இனிப்பைத் தயாரித்தது.

சாக்ரினின் கால்சியம் அல்லது சோடியம் உப்பு நீரிழிவு நோயாளி களுக்கான இனிப்பாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.  இதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்  துறையும் உலகின் பிற நிறு வனங்களும் அங்கீகரித்துள்ளன. சாக்ரினை சர்க்கரைக்குப் பதிலாக கோகா கோலா நிறுவனமும் பாக்கெட்டில் அடைத்த உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங் களும் பயன்படுத்துகின்றன.

சாக்ரின் உண்பதன் பின்விளைவுகள் தெரியுமா..?

ஆனால், 1907 ஆம் ஆண்டே சாக்ரின் ஆரோக்கியத் திற்கு ஊறு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதை அமெரிக்காவின் உணவு  மற்றும்  மருந்து நிர்வாகத்துறை  கண்டுபிடித்தது.  இது புற்று நோய் ஊக்கி ஆகும் என்பதால் இதன் பாதுகாப்பு சர்ச்சைக் குரியதானது.

DR. HARVEY WILEY- அமெரிக்காவின் உணவு  மற்றும்  மருந்து நிர்வாகத் துறையின் முதலாவது பொறுப்பாளர் ஹார்வி வாய்லி  கூறுகிறார் :

சாக்ரினைப் பயன் படுத்துவோர் சர்க்கரையைத் தான் நாம் சுவைக்கிறோம் என்று நம்பினால்,  அவர்கள் ஏமாந்து போவர். உண்மையில் சாக்ரின் என்பது, தார் மற்றும் நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப் படுகிறது. உணவு மதிப்பீடு அதில் அறவே  கிடையாது. எனவே,  இது அடியோடு ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

கட்டுப்பாடின்றி  சாக்ரினைப் பயன் படுத்திய நீண்ட கால அனுபவத்திற்குப் பின் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில், எச்சரிக்கை வாசகம் உறையில் பொறிக்காம ல் சாக்ரின் விற்பனை செய்யக் கூடாது என்று முடிவு செய்யப் பட்டது. எலிகளுக்கு சாக்ரினைக் கொடுத்து சோதித்ததில், சாக்ரின் புற்றுநோயை ஊக்குவிக்கக் கூடியது என்று கண்டறியப் பட்டதே இதற்குக் காரணம்.

அப்படியிருந்தும், மூன்று தசாப்தங்களாக மான்சாண்டோ நிறுவனம் போராடி, மேற்கண்ட முடிவை மாற்றுவதி ல் 2001ஆம் ஆண்டு வெற்றியும் கண்டது. என்னதான் அவர்கள் முடிவை மாற்றிக் கொண்டாலும், தார் மற்றும் நிலக்கரி மூலம் எடுக்கப்பட்ட ஒரு பொருள் எப்படி பாதுகாப்பான உண் பொருளாக இருக்க முடியும்?

சாக்ரின் கலந்த பொருளை இனியாவது பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்...

Sources: http://en.wikipedia.org/wiki/Saccharin
http://khanbaqavi.blogspot.in/2012/09/blog-post.html

Artificial sweetener not good for health | Saccharine History and Side effects, nirilivu noiyaligal saccharine sappidalaama, artificial sweetener for diabetic patients, sarrkarai noiyaligalukku saccharine, sarkkarai noi sarkkarai, seyarkkai sarkkarai, general knowledge in tamil, GK for school students in tamilnadu, tamil college students guide, Awareness news for sugar patientsஎனதருமை நேயர்களே இந்த 'சர்க்கரைக்கு மாற்றான சாக்ரின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா..? அதனை உண்பதன் பின்விளைவுகள் தெரியுமா..?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News