17 நவம்பர் 2014

பல்பு வாங்குன பாக்டரி முதலாளி...காமெடி கதை

பல்பு வாங்குன பாக்டரி முதலாளி...காமெடி கதை, tamil comedy kadhaigal, Funny short story in tamil,

Funny stories in tamil, comedy factory owner story, tamil short stories, sirukadhaigal, sirukadhai
ஒரு பெரிய பாக்டரி .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பாக்குற கம்பெனி.. எல்லாம் நல்லபடியாதான் போய் கிட்டு இருந்துச்சி…

ஒரு நாள் அந்த முதலாளி பாக்டரிகுள்ள ரௌண்ட்ஸ் வந்தாராம்… அப்போ ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்” அப்படின்னு படுத்து கிடந்தான்..

அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கி கிட்டு, அவன எழுப்பினார்.. “தம்பி நீ மாசம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக் கிட்டு “மூவாயிரம் ருபாய் சார்” அப்படின்னான்.

உடனே அவரு பைக்குள்ள இருந்து பர்ச எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு… “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு.. நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் குடுக்கரதுக்கு இந்த பாக்டரிய நடத்தல..” அப்படின்னு சொன்னாரு..

அவன் ஒரு நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான்.. அப்புறம் அந்த பணத்த வாங்கி கிட்டு வேகமா வெளிய போய்ட்டான்… எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க..

அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து… “இனிமே எல்லாம் அப்படி தான்” (தமிழ் பட ஹீரோ டயலாக் மாதிரி) அப்படின்னு சொன்னாரு... அப்புறமா கணக்கு பிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன்..??” அப்படின்னு கேட்டாரு…

அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னார்… ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி.. “

இது எப்படி இருக்கு… டீ கிளாஸ் எடுக்க வந்தவனுக்கு பத்தாயிரம் குடுத்த முதலாளிய நெனைச்சா எப்படி தெரியுமா இருக்கு..???

#நீ கேளேன்… மச்சான்.. நீகேளேன்… அண்ணே.. நீங்க கேளுங்களேன்… Funny stories in tamil, comedy factory owner story, tamil short stories, Funny short story, tea kadai paiyanukku sambalam koduttha mudhalaali naadagam, tamil comedy kadhaigal, laughing stories, sirukadhaigal, siruppu kadhai, factory mudhalaali sirppu kadhaiஎனதருமை நேயர்களே இந்த 'பல்பு வாங்குன பாக்டரி முதலாளி...காமெடி கதை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News