நன்மை தரும் சப்போட்டா..! | Tamil247.info
Loading...

நன்மை தரும் சப்போட்டா..!

நன்மை தரும் சப்போட்டா

love failure joke in tamilசப்போட்டா (Manilkara zapota பொதுவாக sapodilla) சுவையான பழம் தரும் தாவரம். இது இந்தியா, பாகிஸ்தான், மற்றும்மெக்சிக்கோவில் மிகுதியாக விளையக்கூடியது. தெற்கு மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளுக்கு உரித்தான இவ்வகைப் பழங்கள்[1] ஜப்ப்பானியக் குடியேற்றத்தின் போது பிலிப்பைன்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

குண்டுசப்போட்டா, வால்சப்போட்டா என இதில் வகைகள் உண்டு. பால்-சப்போட்டா தின்னும்போது உதடுகளில் பால் ஒட்டிக்கொள்ளும். கர்நாடகச் சப்போட்டாவில் இனிப்பு மிகுதி. பொதுவாகச் சப்போட்டாப் பழம் உடலுக்கு நல்லது. எனிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை அதிக அளவு உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். [வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்பு உண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ (sapota) என்றும் ‘சப் போடில்லா’ (sapodilla) என்றும் கூறப்படுகிறது. இதன் தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

சப்போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு. * சீமை இலுப்பை ‘சப்போட்டா’ என்ற ஆங்கிலப் பெயரையே பெரும்பாலும் தமிழில் சப்போட்டா என்று பேச்சு வழக்கில் சொல்லியும், எழுதியும் வருகிறோம். இதன் தூய தமிழ்ப்பெயர், ‘சீமை இலுப்பை’ ஆகும். இலுப்பைப் பழத்தைப் போல் உருவமுடையதால் இப்பெயர் வந்தது.மருத்துவ பயன்கள்:

• சப்போட்டா பழத்தை அரைத்துச் சாற்றை தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், வயிற்று வலி இவற்றைப் போக்கும்.

• சப்போட்டா பழம், வாழைப்பழம், மாம்பழம் சேர்த்து பொடியாக நறுக்கி இவற்றை ஒன்றாக கலந்து அரைத்து பஞ்சாமிர்தம் செய்து சாப்பிட உடலுக்கு வலிமையும் உறுதியையும் தரும்.

• சப்போட்டா பழம், கொய்யா, திராட்சை இவற்றை ஒன்றாகக் கலந்து அத்துடன் தேன் சேர்த்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டுவர உடல் வலிமை, உறுதி இவற்றைத் தரும்.

• சப்போட்டா பழத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடல்புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் இவற்றைப் போக்கும்.

• சப்போட்டா பழத்தைத் தோல் நீக்கி அத்துடன் பால் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டுவர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

• சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.

• கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

• சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான். ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ்குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.

• பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்தமயக்கத்திற்கும் இது நல் மருந்து. சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்திட்டு நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும். இயற்கை நண்பர்கள்..

sapota palam, sappotta tree, sappotta health benifits, Sappotta udal nalam, nanmai tharum sappotta, sapodilla wikipideia, Wiki history of sapotta,marutthuva payangal, iyarkkai unavugal, sappotta iyarkkai marutthuva kunam, marutthuva payangal, koluppu karaiya, thoppai kuraiya unavugal, udal koluppu karaikkum, udal valimai, udal urudhi, udal palam tharum, soodu thanium,udal soodu thaniya iyarkkai marutthunvam
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'நன்மை தரும் சப்போட்டா..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
நன்மை தரும் சப்போட்டா..!
Tamil Fire
5 of 5
நன்மை தரும் சப்போட்டா சப்போட்டா (Manilkara zapota பொதுவாக sapodilla) சுவையான பழம் தரும் தாவரம். இது இந்தியா, பாகிஸ்தான், மற்றும்மெக...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment