இதய நோய் - தொகுப்பு 1: இதய நோயின் வகைகள் | Tamil247.info

இதய நோய் - தொகுப்பு 1: இதய நோயின் வகைகள்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
தயம்... நம் உயிர் காக்கும் உறுப்பு. சராசரியாக 300 கிராம் எடையுள்ள இதயம் நாளொன்றுக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது. ஒரு வருடத்தில்  31 லட்சத்து 59 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பம்ப் செய்கிறது. நாம் உறங்கினாலும், விழித்திருந்தாலும், சும்மா இருந்தாலும், சுறுசுறுப்பாக  வேலை செய்தாலும் இடைவிடாது துடிப்பது இதயம் மட்டுமே.இதய நோய்கள்

இதய நோய்களைப் பிறவியிலேயே ஏற்படும் நோய்கள், பிற்காலத்தில் ஏற்படும் நோய்கள் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.  பிறவியில் வருகின்ற இதய நோய்கள் குழந்தைகளைப் பாதிக்கின்றன.

இவை பெரும்பாலும் இதயவால்வு கோளாறுகள் மற்றும் இதயத்தின் இடைச்சுவர்க் கோளாறுகளால் வருபவை. இவற்றுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு தரும். பிற்காலத்தில் வருகின்ற இதயத் துடிப்பு நோய், கரோனரி ரத்தக்குழாய் நோய் மற்றும் இதயச் செயலிழப்பு உள்ளிட்ட இதயத்தசை நோய்கள் பெரியவர்களைப் பாதிக்கின்றன. இதயத்துடிப்புக் கோளாறுக்கு மாத்திரை மற்றும் பேஸ்மேக்கர் கருவி உதவும். இதயச் செயலிழப்புக்கு மருத்துவ சிகிச்சை பலன் தரும்.
Idhay noi thagavalgal, irudhaya kolaru, Heart problems in tamil

ரத்தக்குழாய் அடைப்பு

உடல் முழுவதும் ரத்தத்தைப் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது இதயம். அந்த இதயம் இயங்கவும் ரத்தம் தேவை! அந்த ரத்தத்தை வழங்குவது கரோனரி ரத்தக்குழாய்கள். இவற்றில் கொழுப்பு அடைத்துக்கொள்வதாலோ, ரத்தம் உறைந்து போவதாலோ அடைப்பு ஏற்படலாம்.

இதனால், ரத்த ஓட்டம் குறைந்து இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உணவுச்சத்துகள் கிடைப்பது தடைபடும். அப்போது இதயம் துடிப்பதற்குச் சிரமப்படும். இதுதான் மாரடைப்பு.

மாரடைப்பில் மூன்று வகை உண்டு:

'நெஞ்சுவலி'

இதயத் தசைகளுக்கு ரத்தம் கிடைப்பது குறையத் தொடங்கிவிட்டாலே இதயம் நமக்கு அதைக் காட்டிக்கொடுத்துவிடும். உதாரணமாக, மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கும். அப்போது  இதயத்துக்கு ரத்தமும் ஆக்ஸிஜனும் தேவையான அளவுக்குக் கிடைப்பதில்லை.

எனவே, இதயம் துடிக்கச் சிரமப்படும். இதன் விளைவால், நடு நெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டால், நெஞ்சுவலி குறைந்துவிடும். இந்த ‘அலார’ அறிகுறியைக் கவனித்து சிகிச்சை பெற்றுக் கொண்டால், மீண்டும் நெஞ்சுவலி வராது. இதற்கு ‘ஆஞ்சைனா பெக்டோரிஸ்’ (Angina pectoris) என்று பெயர்.

maradaippin ariguri, maradaipin vagaigal, ratha kulai adaippu

'மாரடைப்பு'

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி கழுத்து, தாடை, இடது தோள், இடது  கைவிரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்த்து ‘ஜில்’லென்று ஆகிவிடும். ஓய்வெடுத்தாலும் நெஞ்சுவலி குறையாது. நேரம் ஆக ஆக வலி  கூடிக்கொண்டே போகும்.

மயக்கம் வரும். மரணத்தின் அறிகுறிகள் எட்டிப் பார்க்கும். இதுதான் உண்மையான மாரடைப்பு. அதாவது, ‘மயோகார்டியல் இன்ஃபார்க்ஷன்‘(Myocardial infarction). இந்த மாதிரி பாதிக்கப்பட்டவரை எவ்வளவு சீக்கிரம் சிகிச்சைக்குக் கொண்டு செல்கிறோமோ அந்த அளவுக்கு மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிவிடலாம்.


'உடனடி மாரடைப்பு'

‘நெஞ்சைப் பிடிச்சுட்டு வலிக்குதுன்னு சொன்னார். அடுத்த நிமிஷமே மயங்கி விழுந்துட்டார். பேச்சும் மூச்சும் நின்னு போச்சு!’ மாரடைப்பால் மரணமடைந்தவர்களின் வீடுகளில் இப்படிச் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘கார்டியோஜெனிக் ஷாக்’  (Cardiogenic shock) எனும் உடனடி மாரடைப்பு இது. சிகிச்சை பெறுவதற்கு நேரம் தராது.

நெஞ்சுவலி வந்ததுமே இறப்பும் வந்துவிடும். அதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் இருக்கும்போது ஒருவருக்கு இது ஏற்படுமானால் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால், மரணத்திலிருந்து தப்பிப்பது சிரமம். தற்போது மாறிவிட்ட வாழ்க்கை முறைகளால் இப்படியொரு கொடுமையான  மாரடைப்பு வருவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதிலும் ‘டீன்ஏஜி’ல் உள்ளவர்களை இது தாக்குகிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.

  idhaya noi part1 irudhaya noi vagaigal, Idhay noi thagavalgal, irudhaya kolaru, Heart problems in tamil, Health tips, maaradaippu, nenju vali vara kaaranam, maradaippin ariguri, maradaipin vagaigal, ratha kulai adaippu, idhaya vali
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'இதய நோய் - தொகுப்பு 1: இதய நோயின் வகைகள் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
இதய நோய் - தொகுப்பு 1: இதய நோயின் வகைகள்
Tamil Fire
5 of 5
இ தயம்... நம் உயிர் காக்கும் உறுப்பு. சராசரியாக 300 கிராம் எடையுள்ள இதயம் நாளொன்றுக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது. ஒரு வருடத்தி...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News