'கத்தி' சினிமாவில் வரும் சமந்தாவின் போன் நம்பரால் தினம் தினம் அவஸ்தை அனுபவிக்கும் ஆசிரியர் | Tamil247.info

'கத்தி' சினிமாவில் வரும் சமந்தாவின் போன் நம்பரால் தினம் தினம் அவஸ்தை அனுபவிக்கும் ஆசிரியர்

Kaththi Samantha phone number scene irritates a teacher in real life

Kaththi Samantha phone number scene irritates a teacher in real life 'கத்தி' சினிமாவில் 'என்னுடைய போன் நம்பர்' என சமந்தா கூறும் எண் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரியரின் நம்பர். இதனால் அவருக்கு 'அழைப்பு தொல்லை' அதிகரித்துள்ளது. 'கத்தி' சினிமாவில் நடிகை சமந்தா, விஜயிடம் தனது மொபைல் எண்ணை தருவது போல காட்சி உள்ளது. அந்த எண்ணை, விஜய் இரண்டு முறை திரும்ப சொல்வார். பின், சமந்தாவை அந்த எண்ணில் தொடர்பு கொள்வார்; மறுமுனையில் எடுப்பவர், 'நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டியிருந்தால் இந்த எண்ணில் தகவல் சொல்லுங்கள்' என்பார். சினிமாவில் நகைச்சுவையாக இடம்பெற்ற இந்த காட்சி, கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் ஜெகதீஷின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

அந்த எண் அருமனை என்ற கிராமத்தில் உள்ள ஜெகதீஷூக்கு சொந்தமானது. தனியார் பள்ளி ஆசிரியரான இவர் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன் இந்த எண்ணை பெற்றுள்ளார்.

'கத்தி' சினிமா வெளியான நாளில் இருந்து தொடர்ந்து இவருக்கு 'அழைப்பு தொல்லை' அதிகரித்து விட்டது. போன் செய்வோர், 'சமந்தா இருக்கிறாரா... விஜய் இருக்கிறாரா?... என விசாரிக்கின்றனர்.  'நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்' என சிலர் கலாய்க்கின்றனர் இதில் வெளிநாடு அழைப்புகளும் வருகின்றன. இதனால் போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டார். 'இந்த எண் சினிமாவில் எப்படி வந்தது?' என பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் விளக்கம் அளிக்கவில்லை. 'எண்ணை தற்செயலாக கூறியிருக்கலாம் அல்லது சினிமா படப்பிடிப்பின் போது அந்த எண் உபயோகத்தில் இருந்திருக்காது. படப்பிடிப்பு நடந்து பல மாதங்கள் ஆகி விட்டது. அதன் பின் இந்த எண்ணை 'ஆக்டிவேட்' செய்திருக்கலாம்' என அதிகாரிகள் கூறுகின்றனர். நடந்தது என்ன? என்பது முருகதாஸ் குழுவினருக்கு மட்டுமே வெளிச்சம்.
Kaththi Samantha phone number scene irritates a teacher in real life, Kaththi phone comedy went wrong for a private school teacher in tamilnadu, Samantha phone numeber in kaththi, actor vijay call actress number and a dog reproduction control department receives the call tamil cinema comedy went wrong in real life.

இந்த ''கத்தி' சினிமாவில் வரும் சமந்தாவின் போன் நம்பரால் தினம் தினம் அவஸ்தை அனுபவிக்கும் ஆசிரியர் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
'கத்தி' சினிமாவில் வரும் சமந்தாவின் போன் நம்பரால் தினம் தினம் அவஸ்தை அனுபவிக்கும் ஆசிரியர்
Tamil Fire
5 of 5
Kaththi Samantha phone number scene irritates a teacher in real life 'கத்தி' சினிமாவில் 'என்னுடைய போன் நம்பர்&...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment