09 செப்டம்பர் 2014

, , ,

5 கி.மீ., நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்

weekly 5kms walking kottayam collector Ajith kumar, save energy, pollution free, adhisayam, vinodham, tamil news, kerala collector walking to office

வாரம் ஒருமுறை 5 கி.மீ., நடந்தே அலுவலகம் செல்லும் அதிசய கலெக்டர்..!!

திருவனந்தபுரம்: கேரளாவின், கோட்டாயம் மாவட்ட கலெக்டராக இருக்கும் அஜித்குமார், குறைந்தபட்சம், வாரத்திற்கு ஒருமுறை, வீட்டிலிருந்து தன் அலுவலகத்திற்கு, 5 கி.மீ., நடந்தே செல்கிறார்.

இதை பின்பற்றுமாறு, பிற அதிகாரிகளையும் அவர் கேட்டுக் கொள்வதோடு, அவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்கிறார். நடந்தே அலுவலகம் வருவதால், உடலுக்கு பயிற்சி கிடைப்பதோடு, உள்ளூர் மக்களின் பிரச்னைகளையும் நேரில் அறிய முடிகிறது என்பதால், இந்த முறையை பின்பற்றுவதாக கூறும் கலெக்டர் அஜித்குமார், தினமும் இவ்வாறு முடியாது என்பதால் தான், வாரத்திற்கு ஒருமுறையாவது பின்பற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

weekly 5kms walking kottayam collector Ajith kumar, save energy


கலெக்டரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ள அதிகாரிகளில் பெரும்பாலானோர், இதை பின்பற்றி வருகின்றனர். சிலர், ஆர்வ மிகுதியால், 10, 12 கி.மீ., கூட நடந்தே அலுவலகம் வருகின்றனர். அதிகாரிகள் தன் உத்தரவை பின்பற்றுகின்றனரா என்பதை ஆய்வு செய்யும் கலெக்டர், தான் நடந்து வருவதை பலரும் அறிய செய்கிறார். இதன் மூலம், எரிபொருள் சிக்கனம் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையேயான இடைவெளி குறைவதாகவும் கூறுகிறார்.

இதை, மாணவர்களும் பின்பற்றி, பள்ளிக்குச் செல்வது நல்லது என கூறும் இவர், ரத்த தானத்தை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களில், இரு முறை ரத்த தானம் செய்துள்ளார்.
weekly 5kms walking kottayam collector Ajith kumar, save energy, pollution free, adhisayam, vinodham, tamil news, kerala collector walking to office எனதருமை நேயர்களே இந்த '5 கி.மீ., நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News