11 செப்டம்பர் 2014

பலரது உயிரை காப்பாற்ற உதவும் வாட்ஸ் ஆப்

whatsapp helps to rescue people, Kashmir tragedy, Natural disaster recovery, social media helps to rescue people affected by flood, tamil news, technology news

(11 Sep 2014) ஜம்மு-காஷ்மீர் வெள்ள மீட்பு பணியில் இந்திய ராணுவம் சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ்புக், மற்றும் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்தியது. இது வெள்ளம் புகுந்த பல பகுதிகளில் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கானவர்களை மீட்க உதவியது.

இந்திய ராணுவ தலைமையகத்தின் இணையதள பக்கத்தில் பெறப்படும் மெசேஜ்கள், அவற்றின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் பெறப்படும் மெசேஜ்கள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் மீட்பு பணியில் உள்ள ராணுவக் குழுக்களின் சீனியர் கமாண்டர்களுக்கு பார்வேர்டு செய்யப்பட்டது. அதை வைத்து மீட்பு படையினர் சம்பவ இடத்தை கண்டுபிடித்து விரைந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்க முடிந்தது.

social media helps to rescue people affected by flood, tamil newsவெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் அனுப்பும் மெசேஜ்களின் அடிப்படையில் மீட்பு பணியை மேற்கொள்வதற்கென்றே ஸ்ரீநகரில் 15 ராணுவ குழுக்களும், நாக்ரோதாவில் 16 குழுக்களும் நிறுத்தப்பட்டிருந்தது. ஜம்முவை சேர்ந்த எம்.எல்.ஏ ரபீக் அஹமது வாட்ஸ் ஆப் மூலமாக காப்பாற்றப்பட்டார்.


கடந்த 2 நாட்களில் மட்டும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் அனுப்பிய 450-க்கும் மேற்பட்ட மெசேஜ்கள் வாட்ஸ் ஆப் வழியாக ராணுவத்திற்கு வந்துள்ளது. இந்த மெசேஜ்களை கமாண்டர்கள் கன்ட்ரோல் ரூமுக்கு அப்படியே பார்வேர்டு செய்கிறார்கள். உடனடியாக சம்பந்தபட்ட இடத்தில் உள்ள மீட்பு படைக்கு தகவல் அனுப்பப்படுகிறது. பிறகு லொகேஷனை கண்டுபிடித்தவுடன் மீட்கப்படுகின்றனர்.

இதுவரை 8018 பேர் மீட்கப்பட்டுள்ளனர். யாராவது வெள்ளத்தில் சிக்கியிருந்தால் கன்ட்ரோல் ரூம் நம்பரான 011-26107953, அல்லது 09711077372 என்ற மொபைல் எண்ணுக்கு தெரிவிக்கலாம்.

whatsapp helps to rescue people, Kashmir tragedy, Natural disaster recovery, social media helps to rescue people affected by flood, tamil news, technology news எனதருமை நேயர்களே இந்த 'பலரது உயிரை காப்பாற்ற உதவும் வாட்ஸ் ஆப்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News