உலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் 2014: இந்தியாவிற்கு 6-வது இடம்.. | Tamil247.info
Loading...

உலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் 2014: இந்தியாவிற்கு 6-வது இடம்..

உலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியல்..!

சிங்கப்பூர்: 2014-ஆம் ஆண்டிற்கான யூ.பி.எஸ். மற்றும் வெல்த்-எக்ஸ்   பில்லியனர் சென்சஸ்(wealth x and ubs billionaire census 2014) சமிபத்தில் வெளியானது. அதில், கடந்த ஆண்டு 103 கோடீஸ்வர பணக்காரர்களை கொண்டிருந்த இந்தியாவுக்கு இந்த முறை 100 பேர் மட்டுமே உள்ளனர். இந்தியா 175 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்ட 100 கோடீஸ்வரர்களை கொண்டுள்ளது.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்தியாவுக்கு இந்த முறையும் பட்டியலில் 6-வது இடமே வழங்கப்பட்டிருக்கிறது.

சொத்து மதிப்பின் மொத்த கூட்டுத்தொகை அடிப்படையில் உலக அளவில் 2,325 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர் அவர்களில் 286 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரான்ஸ், ஹாங்காங், சுவிட்சர்லாந்து போன்ற மற்ற நாடுகளை விட அதிக கோடீஸ்வரர்களை கொண்டுள்ளது இந்தியா. குறிப்பாக, நிதி தலைநகரான மும்பையில் 28 கோடீஸ்வரர்கள் உள்ளனர். உலக அளவில் 20
பில்லியனர் சிட்டிகளில் மும்பை இடம்பெற்றுள்ளது.


40 கோடீஸ்வர நாடுகளில் அமெரிக்கா 571 கோடீஸ்வரர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா (190) இரண்டாவது இடத்திலும், பிரிட்டன் (130) 3-வது இடத்திலும் உள்ளது.  உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாக யூபிஎஸ் சென்சஸ் மூலம் தெரியவருகிறது. 2014-ல் மட்டும் 155 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கிறார்கள்.ulaga kodeeswaragal adhigma ulla naadugalin pattiyal, podhu arivu, general knowledge, world billionaire list, wealth x and ubs billionaire census 2014, Wealth-X World Ultra Wealth Report 2013 - 2014, tamil news, ulaga Panakkarargal
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'உலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் 2014: இந்தியாவிற்கு 6-வது இடம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
உலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் 2014: இந்தியாவிற்கு 6-வது இடம்..
Tamil Fire
5 of 5
உலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியல்..! சிங்கப்பூர்: 2014-ஆம் ஆண்டிற்கான யூ.பி.எஸ். மற்றும் வெல்த்-எக்ஸ்   ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment