24 செப்டம்பர் 2014

,

நாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை

Naai kadicha narayanaswami comedy story, Tamil short stories, comedy stories, Tamil jokes, Narayanaswami jokes

நாராயணசாமிக்கு கொஞ்சம் குழந்தை மனசு.

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த குழந்தைத்தனமான செயல்கள் மட்டும் அவரை விட்டு விலகவில்லை. ஓய்வு நேரங்களில் எப்பொழுதும் சிறுவர்ளுடனேயே விளையாடிக் களித்திருப்பார்.

ஒருநாள் தெருவில் இருந்த குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று அவரது வலதுகாலை நன்றாகக் கடித்துவிட்டு ஓடிவிட்டது.

உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார். நாராயணசாமியின் காயங்களுக்கு மருந்து போட்ட மருத்துவர்,

"இது வெறிநாய்க் கடியான்னு சரியா தெரியல, அதனால ஒரு மூணு நாளைக்கு உங்களக் கடிச்ச நாய வாட்ச் பண்ணுங்க, மூனு நாளைக்கு அப்புறம் அது என்னாச்சுனு வந்து சொல்லுங்க" என்று கூறி அனுப்பினார்.
Naai kadicha narayanaswami comedy story, Tamil short stories, comedy stories

நாராயணசாமியும் மருத்துவர் சொன்னது போலவே அந்த நாயினைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டு வந்தார்.

மூன்றாம் நாள் மருத்துவமனைக்குச் சென்ற நாராயணசாமியிடம்,

"அந்த நாய் எப்படி இருக்குது ? நல்லா வாட்ச் பண்ணுனீங்களா ?" என்று வினவினார் மருத்துவர்.

"அதுக்கு ஒண்ணும் ஆகல டாக்டர், அப்படியேதான் இருக்குது, என்ன கொஞ்சம் குண்டாகிருச்சு!"

"நல்லவேளை ஒண்ணும் ஆகல, வெறிபிடிச்ச நாயா இருந்தா செத்துப் போயிருக்கும் ... ஒண்ணும் பிரச்சினை இல்லை; நீங்க பயப்படாம போங்க" என்றார் மருத்துவர்.

"ஒரே நாய் இரண்டு தடவ சாகுமா என்ன ?" ஆச்சர்யமாய்க் கேட்டார் நாராயணசாமி.

"என்ன சொல்லுறீங்க? ஒரு நாய் இரண்டு தடவ எப்படிச் சாகும்?"

"இல்ல டாக்டர் ... நீங்க அந்த நாய வாட்ச் பண்ணச் சொன்னீங்கள்ல ... நான் அப்பவே அது பின்னாடி போனேன் ... ஆனா அது ஒரு எடத்துல நிக்கவே இல்ல ... அதான் அப்பவே அதை கொன்னு எங்க வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன் ... இந்த மூனுநாளா செத்துப் போன நாயைத்தான் பார்த்துட்டு இருந்தேன் ... நீங்க மறுபடி செத்துப்போகும்னு சொல்லுறீங்களே, அதான் கேட்டேன்! "

இப்பொழுது டாக்டருக்கு வெறிபிடிக்க ஆரம்பித்திருந்தது!
Naai kadicha narayanaswami comedy story, Tamil short stories, comedy stories, Tamil jokes, Narayanaswami jokes, tamil stories read online, funny tamil posts, stories for facebook shareஎனதருமை நேயர்களே இந்த 'நாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News