21 செப்டம்பர் 2014

, ,

திருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை...

Kanavan manaivi jokesin tamil, Husband and wife speech after marriage, wife funny reply based on the years she spent with her husband

திருமணமான புதியதில் பெண்கள்:

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.
இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து:


1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க. பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்
Kanavan manaivi jokes in tamil, Husband and wife speech after marriage, manaivi tharum mariyadhai tamil comedy postபோதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.
ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்
இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.


பல ஆண்டுகள் கழித்து:

1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும். யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான்.  பிடிச்சா தின்னுங்க,
இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நான்
பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான்
மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட
போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
Kanavan manaivi jokes in tamil, Husband and wife speech after marriage, wife funny reply based on the years she spent with her husband, Manaivi sollum reply, manaivi  kanavanukku tharum mariyadhai, kalyaanam aanavudan, kalyaanam aagi sila aandugal kaliththu, pala aandugal kudumbam nadatthiya piragu manaivi sollum varththaigal joke,   Tamil funny speech, tamil funny talkingsஎனதருமை நேயர்களே இந்த 'திருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News