14 செப்டம்பர் 2014

, ,

கிலோவிற்கு 400 கிராம் ஏமாற்றி பழங்கள் விற்ற மதுரை பழ கடைகாரர்கள்: எவ்வாறு ஏமாற்றினார்கள் என விளக்கம்

Madurai fruit shop weight cheating case, 400gms per kilo fruits weight fraud, officials ceased unstamped weighing machines, tamil news, awareness news, consumer helpline numbers, edai kuraivaga virkkum kadaikaarakgal, complain weight cheating, consumer court, edai kuraivaaga vippavargal, madurai pazha kadai

(15 Sep 2014) மதுரை: கிலோவிற்கு 400 கிராம் பழத்தை குறைவாக ஏமாற்றி வித்த மதுரை பழ கடைகாரர்கள்:  அதிகாரிகளின் ஆய்வில் சிக்கினர். என தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்தியின் சுருக்கம்.

மதுரை பஸ் நிலையங்களில் உள்ள பழக்கடைகளில் ஒரு கிலோவுக்கு 400 கிராம் வரை எடைமோசடி நடப்பது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிந்தது. தராசு தட்டுகளில் துளைபோட்டு பயணிகளை ஏமாற்றி இந்த மோசடியில் ஈடுபட்ட 5 கடையினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்று எடை குறைவாக விற்கப்படுவது தெரிந்தால் 0452 2604388 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்

நுகர்வோர்கள் பழம் வாங்கும்போது தங்களுக்கு எடை கூடுதலாகவே பழங்களை வழங்குவதாக வியாபாரிகள் காட்டிக்கொள்வர். பழங்கள் உள்ள தராசு தட்டுகள் தரையை தட்டும் அளவுக்கு கீழே இறங்கும். இதனால் தங்களுக்கு அதிக எடையில் பழங்கள் வழங்குகின்றனர் என்ற மகிழ்வோடு நுகர்வோர் வாங்கிச்செல்வர்.
Madurai fruit shop weight cheating case, 400gms per kilo fruits weight fraud, officials ceased unstamped weighing machines, tamil news, awareness news, consumer helpline numbers

அப்படியிருந்தும் 400 கிராம்வரை எப்படி எடை குறைவாக வழங்குகின்றனர் என்பது அதிகாரிகளுக்கே குழப்பமாக இருந்தது. இதை தெரிந்துகொள்ள

அதிகாரிகள் தராசை முழுமையாக ஆய்வு செய்தனர். பின்னர் தராசு வைக்கப்பட்டிருந்த மேடையை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

பிளாஸ்டிக் பெட்டிகளை மேஜைபோல் கவிழ்த்துவைத்து அதன்மேல் தராசுகளை வைத்திருந்தனர். பிளாஸ்டிக் பெட்டியில் ஊசி நுழையும் அளவுக்கு துளையிட்டிருந்தனர். இந்த துளையை ஆய்வு செய்தபோது, உள்ளே ஒரு நூலில் 400 கிராம்வரை எடையுள்ள இரும்பு எடை கற்களை கட்டி தொங்கவிட்டிருந்தனர். இந்த நூலை தராசில் பொருட்கள் வைக்கும் தட்டின்கீழ் கட்டி வைத்திருந்தனர்.

இது சாதாரணமாக பார்க்கும்போது நுகர்வோருக்கு தெரியாத வகையில் அமைத்து மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. 600 கிராம் பழத்தை ஒரு கிலோவுக்கும் மேல் இருப்பதாக தராசு மூலமே எடைபோட்டு காட்டி ஏமாற்றியுள்ளனர். இந்த தராசுகள் ஆண்டுதோறும் முறையாக முத்திரையிடப்படாததும் தெரிந்தது. இதேபோல் வண்டிகளில் வைத்து பழம் விற்போரும் மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. இவர்கள் வைத்திருந்த தராசிலேயே 500 கிராம்வரை கூடுதலாக்கி காட்டும் வகையில் தராசினை வடிவமைத்திருந்தனர்.

இங்கு ஒரு கிலோ பழம் வாங்கினால் உண்மையான எடை 500 கிராம்தான் இருக்கும். நடைமேடைகளில் கடை வைத்திருந்தவர்கள் அதிகாரிகள் சோதனைக்கு வருவது தெரிந்ததும் தராசு, எடைக்கற்ளை மறைத்து வைத்தனர். இதை அதிகாரிகள் கைப்பற்றியதில் முத்திரையிடப்படாதது தெரிந்தது. பயணிகளின் அவசரநிலையை பயன்படுத்தி வியாபாரிகள் பலர் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிந்தது.

அதிகாரிகள் சோதனைக்கு வருவது தெரிந்ததும் மற்ற பகுதிகளில் இருந்த வியாபாரிகளுக்கு போன் மூலம் தகவல் அளித்துவிட்டனர். இதனால் 54 கடைகளில் சோதனை நடந்தபோதும் முதலில் சோதனை நடத்திய 5 கடைகள் மட்டுமே சிக்கின.

இதுபோன்று எடை குறைவாக விற்கப்படுவது தெரிந்தால் 0452 2604388 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என உதவி ஆணையர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Madurai fruit shop weight cheating case, 400gms per kilo fruits weight fraud, officials ceased unstamped weighing machines, tamil news, awareness news, consumer helpline numbers, edai kuraivaga virkkum kadaikaarakgal, complain weight cheating, consumer court, edai kuraivaaga vippavargal, madurai pazha kadai எனதருமை நேயர்களே இந்த 'கிலோவிற்கு 400 கிராம் ஏமாற்றி பழங்கள் விற்ற மதுரை பழ கடைகாரர்கள்: எவ்வாறு ஏமாற்றினார்கள் என விளக்கம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News