வரலாறு: வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த விளைச்சல்கள்..!! | Tamil247.info

வரலாறு: வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த விளைச்சல்கள்..!!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

வரலாறு: வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த வெளிநாட்டு விவசாய பொருட்களின் விளைச்சல்கள் - என்னென்ன காய்கறிகள், பழங்கள், மரங்கள், தானியங்கள் மற்றும் பண பயிர்கள் வந்துள்ளன..!!

velinaatu vivsayam, agri business after vascodagama visit india, india agri history1498ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வருவதற்கு முன் இந்தியாவில் முக்கியப் பொருட்களாக அரிசி, பருத்தி, கரும்பு, கோதுமை, சோளம், கம்பு மற்றும் பருப்புவகைகள் பயிரிடப்பட்டுவந்தன. உருளைக்கிழங்கு, தக்காளி, நிலக்கடலை, கொய்யா, பப்பாளி, பூசணிக்காய், ஆப்பிள் போன்ற எதுவுமே இங்கு விளைவிக்கப் படவில்லை. அதுமட்டுமல்ல; புகையிலை, பைனாப்பிள், வள்ளிக்கிழங்கு, மிளகாய், கசகசா, முந்திரி போன்றவை கூட இங்கு கிடையாது, கோதுமை, கரும்பு விளைவிக்கப்பட்டாலும் சர்க்கரை போன்ற பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் அறியவில்லை.

வாஸ்கோடகாமா வருகைக்குப் பிறகு உலகின் பல்வேறு உணவு, பழ வகைகள் இந்தியாவின் மேற்குப்பகுதியில் பயிரிட முயற்சி செய்யப்பட்டன. சில தாவரங்கள் இந்திய மண்ணிற்கு ஒத்து வரவில்லை. சில தாவரங்கள் செழிப்புடன் வேரூன்றத் தொடங்கி இந்தியாவின் பல பாகங்களில் விளைச்சலை தரத் தொடங்கின.

மொகாலயர்கள் காலத்தில்தான் புகையிலை, பைனாப்பிள் விளைச்சல் இந்தியாவில் துவங்கியது. 16ஆம் நூற்றாண்டில் இந்திய உணவிலும், வர்த்தகத் துறையிலும் முந்திரி, மிளகாய், நிலக்கடலை, உருளைக்கிழங்கு, பப்பாளி போன்றவை இடம் பெற துவங்கின.

 ஐரோப்பியர்கள் இந்தியாவில் நுழைந்த போது முதன்முறையாக தங்கள் நாட்டின் தாவரங்களைக் கோவாவில் பயிரிட முயற்சித்தனர். போர்ச்சுகீசியர்களும் தங்கள் நாட்டு உணவுத் தாவரங்களைக் கோவாவில் அறிமுகப்படுத்தினர். கோவாவில் விளையும் 20 சதவீத உணவுத் தாவரங்கள் போர்ச்சுகீசியர்களால் அறிமுகமானதாகும். 450 ஆண்டுகளாக கோவாவை ஆண்டுவந்த போர்ச்சுகீசியர்கள் நமக்களித்த செல்வம் இது.

பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஆரஞ்சு, ஆப்பிள், பைனாப்பிள், மிளகாய், கொய்யா, புகையிலை, பப்பாளி போன்றவை இடம் பெற்றன. போர்ச்சுகீசியர்கள்தான் இந்தியாவில் ஒட்டு மாம்பழ வகைகளை அறிமுகப்படுத்தினர். அதே போன்று இந்திய தாவரங்களும் தென்கிழக்கு ஆசியா, மலேசியா, இந்தோனேஷியா, வடக்கு பர்மா, வடமத்திய சீனா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் பயிரிடப்பட்டன. நாம் இங்கிருந்து அனுப்பிய மிளகுக்குப் பதிலாக மிளகாய் இங்கு வந்திறங்கியது. தங்களிடம் வேலை பார்க்கும் அடிமைகள் உடல் பலத்துடன் இருந்த காரணத்தை ஆராய்ந்த போதுதான் பெர்ஷியர்களுக்கு வெங்காயத்தின் மதிப்பு தெரிந்தது. அதன் பிறகே வெங்காயம் உலகப் பிரசித்தி பெற்றது. தற்போது கர்நாடகா, கேரளாவில் செழித்து வளரும் தேயிலை ஆப்ரிக்கா, சீனாவிலிருந்து அறிமுகமானதாகும்.

பின்னர் அந்தந்த நாட்டின் மண்வளத்தைக் கண்டறிந்து பிற நாடுகளில் தாவரங்களைப் பயிரிட "வோர்ல்ட் வைட் பண்ட் ஃபார் நேச்சர் புரொஜெக்ட்' அமைக்கப்பட்டு தாவர பரிமாற்றங்கள் நடந்தன. இதன் மூலம் சில தேவையற்ற தாவரங்களும் இந்திய மண்ணில் நுழைந்ததை தடுக்கமுடியவில்லை., யூகலிப்டஸ், கசூரினா போன்றவை காகிதம், ரேயான் தயாரிக்க முக்கியப் பொருளாக கருதப்பட்டதால் ஆஸ்திரேலியாவிலிருந்து அறிமுகமாயின. இதனால் நம் மண்வளம் பாதிக்கப்பட்டது. இதனுடைய வேர்கள் பூமிக்குள் தண்ணீர் எங்கிருந்தாலும் உறிஞ்சும் தன்மை உடையவை என்பதால் நிலத்தடி நீர் பற்றாக் குறையும் அதிகரித்துள்ளது. இவற்றின் இலையுதிர் காலத்தில் மனிதர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதும் உண்டு.

பி.எல் 480 ஒப்பந்தப்படி அமெரிக்காவிலிருந்து கோதுமையை இந்தியா வரவழைத்தபோது உள்ளே நுழைந்த நச்சுத்தாவரம் பார்த்தீனியம். இன்று இந்தியா முழுமையும் பரவியுள்ளது.

இருப்பினும் வெளிநாட்டிலிருந்து நம்நாட்டில் விளைச்சலுக்காக கொண்டுவரப்பட்ட தாவரங்களின் ஏற்றுமதி மூலம் கோடிக்கணக்கில் அந்நிய செலவாணி கிடைத்து வருகிறது.

வரலாறு: வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த விளைச்சல்கள், agriculture history in tamil, vivasaya porutkal varalaru, velinaatu vivsayam, agri business after vascodagama visit india, india agri history, velanmaiListen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'வரலாறு: வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த விளைச்சல்கள்..!!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
வரலாறு: வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த விளைச்சல்கள்..!!
Tamil Fire
5 of 5
வரலாறு: வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த வெளிநாட்டு விவசாய பொருட்களின் விளைச்சல்கள் - என்னென்ன காய்கறிகள், பழங்கள், மரங்கள், தானியங்கள் ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News