ஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..! | Tamil247.info

ஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
ஞாபக மறதி பொதுவாக எல்லோருக்கும் உள்ள ஒரு விஷயம். ஆனால், ஞாபக சக்தி என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும்.

பரீட்சைகளில் ஞாபக சக்தி மிக்கவர்களே அதிக மதிப்பெண் வாங்கறாங்க. அறிவுத் திறனைவிட ஞாபக சக்தியே பரீட்சிக்கப்படுதுன்னு கூட சொல்லலாம்.

ஞாபக சக்தி குறைவான குழந்தைகள் அறிவாளிகள் அல்ல என்று யாரும் முடிவு கட்டக் கூடாது வாங்கும் மார்க் அடிப்படையில்...

சில குழந்தை மேதைகளிடம் முதலடி ஈற்றடி சொன்னால் அந்தத் திருக்குறளை சொல்வார்கள். ஒப்புவித்தல் போட்டிகளில் 1330 குறட்பாக்கள், கம்ப ராமாயணப் பாடல்கள், நாலடியார் பாடல்கள் முழுவதையும் ஒப்புவிக்கும் ஆற்றல் உள்ளவர்களும் இருக்காங்க.
gnabaga maradhi, gnabaga sakthi, kalvi thagavalgal, educational info in tamil, Educational news in tamil

ஒரே ஒரு குறளைக் கூடப் பார்க்காமல் முழுசா சொல்ல முடியாதவங்களும் இருக்காங்க.

இந்த அசாத்திய ஞாபக சக்தியை ஒரு வியாதி என்றே கருதுகிறார்கள் நரம்பியல் நிபுணர்கள். ஹைபெர் தைமீஸியான்னு அதுக்குப் பெயர்.

ஞாபக சக்தி அதிகமுள்ளவர்கள் :
 • நடிகர் சிவகுமார் 100 பூக்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லுவார்.
 • பிராட் வில்லியம்ஸ் என்பவரிடம் அவர் போட்டோவைக் காட்டினால் அது எடுக்கப்பட்ட தேதி, அன்று நடந்த நிகழ்வுகள், வெப்பநிலை ஒன்றுவிடாமல் சொல்வாராம்.

 • ஏ ஜே என்ற பெண்ணிடம் அவர் வாழ்வில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒரு சினிமா காட்சிபோல வரிக்கு வரி சொல்லும் ஆற்றல் இருந்திச்சு.
 • ஜான் வான் நியூமன் என்ற ஹங்கேரி கணிதவியலார் தான் பல வருஷங்களுக்கு முன் படித்த புத்தகங்களின் வார்த்தைகளை பக்கம் எண் அடிக்குறிப்புகள் உள்பட அப்படியே திருப்பிச்சொல்லும் ஆற்றலை வச்சிருந்தார்.
 • செஸ் ஆட்டத்தில் காய்கள் இல்லாமல் விளையாடும் ஒரு ஆட்டம் உள்ளது. பிளைண்ட் செஸ். அதில் காய்கள் நகர்த்தப்பட்டிருப்பதாகக் கருதி ஆட வேண்டும். நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸன் பல பேருடன் அப்படி ஒரே நேரத்தில் ஆடக் கூடியவர்.
 • சுவாமி விவேகானந்தரும் பத்து வால்யூம் என்சைக்ளோபீடியா புத்தகங்களை சில நாள்களில் மனனம் செய்திருந்தார்.
 • சாலமன் ஷெரீஷிவஸ்கி என்பவர் ஒரு மேடைப் பேச்சைக் கேட்ட பிறகு குறிப்பு எதுவும் எடுக்காம அப்படியே திருப்பிச் சொல்லக்கூடியவராயிருந்தார்.
 • உலக ஞாபக சக்தி போட்டிகளில் கலந்துகொண்ட சிலர் 2000 எண்களை ஒரு மணி நேரத்திலும் 280 வார்த்தைகளை 15 நிமிஷத்திலும் 25 நொடியில் ஒரு அலமாரியில் அடுக்கி இருந்த கலர் அட்டைகளையும் அப்படியே வரிசை மாறாம ஞாபகப்படுத்திச் சொன்னார்கள்.
 • டோனி டி ப்ளொயிஸ், டெரெக் பாராவிசினி என்ற இசைக் கலைஞர்களின் ஞாபகம் வித்தியாசமானது. டோனி 8000 பாடல்களை 20 விதமான இசைக்கருவிகளில் வாசிப்பார். டெரெக் ஒருமுறை ஒரு பாட்டைக் கேட்டால் அப்படியே முழுக்க திருப்பி வாசித்து விடுவாராம்.
 • சில பெண்மணிகள் நம் ஊரிலும் அவரைப் பெண் பார்க்க வந்தபோது மாப்பிள்ளை வீட்டு ஜனங்கள் என்ன கலர் புடவை என்ன நகை போட்டு வந்தார்கள் என ஐம்பது வருஷம் கழிச்சு சொல்லி அசத்துவது உண்டு.

இப்படிதான் நண்பர் ஒருத்தர் ஞாபக சக்தி இல்லாதவர். டாக்டர்கிட்டே போனார்.

""டாக்டர் இப்போ எல்லாம் சிறிய கை நோட்டில் என்ன செய்யணும்னு எழுதி வச்சுக்கிறேன்... மறதி அதிகமாயிடுச்சின்னார்...''"

""நல்ல விஷயம்தானே''ன்னு டாக்டர் நோட்டை வாங்கிப் பார்த்தார்.

முதல் பக்கத்தில் "பல் விளக்கவும்"னு எழுதி இருந்தது.

-தென் கச்சி தாசன் (என்.எஸ்.வி.குருமூர்த்தி) gnabaga maradhi, gnabaga sakthi, kalvi thagavalgal, educational info in tamil, Educational news in tamil, pothu arivu pettagam School students, pothu arivu kalanjiyam, Pallikalvi, arivu valarchi, mind power, memory power, kinds of memory

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..! ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..!
Tamil Fire
5 of 5
ஞாபக மறதி பொதுவாக எல்லோருக்கும் உள்ள ஒரு விஷயம். ஆனால், ஞாபக சக்தி என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். பரீட்சைகளில் ஞாபக சக்தி...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Tamil Education News