06 செப்டம்பர் 2014

,

உலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு

Air ticket charges are less in india, air ticket price comparison survey, tamil news daily, flight ticket rates, vimana kattanam

உலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு...

சிட்னி, செப். 5-

ஆஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான சிட்னி மார்னிங் ஹெரால்டு உலக அளவில் விமான கட்டணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தது. அவற்றின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், உலகிலேயே மிகவும் குறைந்த விமான கட்டணத்தில் பயணம் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மலேசியா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பி்டுகையில் இந்தியாவில் 100 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணம் செய்ய வெறும் 10.36 டாலர்களே செலவாகிறது. ஆனால், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளில் இதே 100 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கு 139.90 டாலர்கள் வரை செலவாகின்றன. அதிக விமான கட்டணம் உள்ள நாடுகள் பட்டியலில்
Air ticket charges are less in india, air ticket price comparison survey
லிதுவானியா, ஆஸ்திரியா, எஸ்டோனியா போன்ற நாடுகள் உள்ளன.

இந்தியாவைப் போலவே தென் ஆப்பிரிக்காவிலும் விமான கட்டணம் மிகக்குறைவாக உள்ளது. அங்கு 100 கி.மீ பயணம் செய்ய 11.63 டாலர்கள் மட்டுமே செலவாகின்றன. அதே போல் அங்கு ரெயில்களில் பயணம் செய்யவும் 100 கி.மீ தூரத்திற்கு வெறும் 1.88 டாலர்கள் மட்டுமே செலவாகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான கட்டணமாகும்.

எனினும், இந்தியாவில் சமீபகாலமாக ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் ஆச்சர்யப்படும் வகையில் ரூ.100, ரூ.500 என கட்டண சலுகையை அவ்வபோது அள்ளி வீசி வருவது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
  Air ticket charges are less in india, air ticket price comparison survey, tamil news daily, flight ticket rates, vimana kattanamஎனதருமை நேயர்களே இந்த 'உலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News