11 செப்டம்பர் 2014

, ,

அனுமாருக்கே ஆதர் கார்டு அனுப்பிய வினோதம்....

aadhar card for indian god hanuman ji, vinodha seidhigal, animaarukku aadar attai, aadhar card scam aadar card, latest tamil news, india news, Rajasthan fake aadhar card, fake aadhar cards, illegal immigration

அனுமாருக்கே ஆதர் கார்டு அனுப்பிய கொடுமை..!! 

கலியுகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் போலிருக்கிறது. ஹிந்துக்கள் மாவீரராகப் போற்றி வழிபடும் கடவுளான ஆஞ்சநேயருக்கே ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டுள்ள வினோதம் அரங்கேறியுள்ளது.

ஆதர் அட்டை எடுப்பதற்கு என்னென்ன கெடுபிடிகள் இருக்கிறது என்று ஆதர் அட்டை எடுத்தவர்களுக்கு தெரியும்.  கைரேகை, கண் ரேகை, எல்லா விரல்களின் ரேகை என பல அடுக்கு முறைகள் உள்ளன. இப்படி இருக்க இந்திய மக்களால் கடவுளாக வணங்கப்படும் ஆஞ்சநேயருக்கே ஆதர் அட்டை எடுத்து அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. 

தீவிரவாதிகள் நமது நாட்டில் ஊடறுவ ஆதர் அட்டை உதவியாக இருக்கும், மட்டற்ற நாட்டிலிருந்து திருட்டுத்தனமாக நமது நாட்டில் குடியேறுபவர்கள் அதிகரிக்கும் என பலவித சர்ச்சைகள் இருக்கும் பட்சத்தில் இதுபோல நடந்திருப்பது சர்ச்சைகளி உறுதிபடுத்துவதாக இருக்கிறது. 

பெங்களூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள தந்தராம்கர் பகுதிக்கு கடந்த 6ஆம் தேதி ஒரு தபால் அனுப்பப்பட்டது.

பவன் (வாயு பகவான்) மகன் என்று ஆஞ்சநேயரைக் குறிப்பிட்டு, அவரது படத்துடன் அச்சிடப்பட்ட ஆதார் அட்டைதான் அந்தத் தபால். செல்போன் எண், பெருவிரல் ரேகை, பிறந்த தேதி ஆகியவற்றுடன் 2094 7051 9541 என்ற பதிவு எண்ணும் அந்த அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது.

illegal aadhar card for indian god hanuman ji, vinodha seidhigal, animaarukku aadar attai

"பெறுநர்' என்ற இடத்தில் குறிப்பாக யாருடைய பெயரும் இல்லாததால், இதை யாரிடம் அளிப்பது என்று புரியாமல் தபால்காரர் ஹீரா லால் திகைத்தார்.


அதிர்ச்சி அடைந்த அவர், இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அவர்கள் அந்த அட்டையில் இடம்பெற்றிருந்த செல்போனுக்குத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து தந்தராம்கர் தலைமை அஞ்சலக அதிகாரி கோப்ராஜ் கூறுகையில், ""விகாஸ் குமார் என்பவர்தான் இந்த அட்டையைத் தயாரித்து, அனுப்பினார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த அட்டையைப் பெற்றுக் கொள்பவர்கள் யாரும் இல்லை என்பதால், தபால் அனுப்பப்பட்ட பெங்களூருக்கே திருப்பி அனுப்ப உள்ளோம்'' என்றார்.

illegal aadhar card for indian god hanuman ji, vinodha seidhigal, animaarukku aadar attai, aadhar card scam aadar card, latest tamil news, india news, Rajasthan fake aadhar card, fake aadhar cards, illegal immigrationஎனதருமை நேயர்களே இந்த 'அனுமாருக்கே ஆதர் கார்டு அனுப்பிய வினோதம்.... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News