19 செப்டம்பர் 2014

, ,

வெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போட்டதால் ஹோட்டலை காலி செய்த டோனி

cricket captain dhoni vacates hotel for hyderabadi biryani, funny news in tamil, Vinodha seidhigal, captain dhoni briyani kidaikkaadha kpbaththil hotel kaali seidhar

(20 Sep 2014) ஐதராபாத்: பிரியாணி சாப்பிட தடை போட்ட கோபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி ஹோட்டலை காலி செய்த வினோதமான தகவல் கசிந்துள்ளன. சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத்தில் கிராண்ட் ககாடியா என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், அணி உதவியாளர்களுக்கு என்று மொத்தம் 180 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

cricket captain dhoni vacates hotel for hyderabadi biryani, funny news in tamil, Vinodha seidhigal
ஐதராபாத்தில் பிரபலமான பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட கேப்டன் டோனிக்கும், அணியினருக்கும் அவரது ஒரு நாள் போட்டி சக வீரரான அம்பத்தி ராயுடுவின் வீட்டில் இருந்து பிரியாணி செய்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வெளியில் இருந்து பிரியாணி எடுத்து வருவதை ஹோட்டல் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த டோனியும், அவரது அணி வீரர்களும் உடனடியாக ஓட்டலை காலி செய்து விட்டு, தாஜ் கிருஷ்ணா ஹோட்டலுக்கு சென்று தங்கினார்கள். கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் வேறு வழியின்றி டோனியுடன் கிளம்பினர்.


ஹோட்டலை காலி செய்தது உண்மை தான் என்று ஒப்புக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், ‘பிரியாணிக்காகத்தான் ஹோட்டல் மாற்றப்பட்டதா? என்பது தெரியாது. டோனியிடம் பேசியதில் இருந்து அந்த ஹோட்டல் அவருக்கு திருப்திகரமாக இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்’ என்றார்.
(தினத்தந்தி பத்திரிகை செய்திகள்)
cricket captain dhoni vacates hotel for hyderabadi biryani, funny news in tamil, Vinodha seidhigal, captain dhoni briyani kidaikkaadha kpbaththil hotel kaali seidhar, Hyderabad Hotels, Briyani in Hyderabadஎனதருமை நேயர்களே இந்த 'வெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போட்டதால் ஹோட்டலை காலி செய்த டோனி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News