மோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.. | Tamil247.info

மோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

காருக்கு வாடகை தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து முறைகேடு செய்யும் கார் மோசடி கும்பல்கள்..

(18 செப், 2014) சென்னை: காருக்கு வாடகை தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து  கார் ஒனர்களிடமிருந்து கார்களை வாங்கி, அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டு ஒரு கும்பல் சென்னையை கலக்கி வருகிறார்கள்.

வாடகை தருவதாக மோசடி:

rental car cheating case in chennai, awareness news, Vilippunarvu seidhigalசென்னை ஜெ.ஜெ.நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்னை கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

மனுவில் கூறி இருப்பதாவது: நான் இணையதளத்தில் ஒரு விளம்பரத்தை பார்த்தேன். அந்த விளம்பரத்தில், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், தங்கள் கார்களை எங்களிடம் ஒப்படைத்தால், மாதம் கணிசமான தொகையை உங்கள் வீடு தேடி வந்து வாடகையாக கொடுப்போம், என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த விளம்பரத்தை உண்மை என்று நம்பி,எனக்கு சொந்தமான காரை, விளம்பரம் கொடுத்திருந்த நபர்களிடம் ஒப்படைத்தேன். அவர்கள் எனது காரை, வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை என்னிடம் தருவதாக சொன்னார்கள். காரின் பராமரிப்பு செலவை அவர்களே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்கள்.

ஆனால் சொன்னபடி, எனது கார் மூலம் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை எனக்கு தரவில்லை. இதனால் எனது காரை திருப்பிக்கேட்டேன். காரை அடமானம் வைத்து, அல்லது விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தையும் அந்த நபர்கள் மோசடி செய்து விட்டனர்.

இதுபோல இணையதளத்தில் பார்த்த விளம்பரத்தை உண்மை என்று நம்பி, நிறையபேர் தங்களது கார்களை கொடுத்து, தவிக்கிறார்கள். ஒரு கும்பல் இந்த கார் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, நான் இழந்த காரை மீட்டுத்தருமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மோசடி கும்பல் கைது: விசாரணை அடிப்படையில் கார் மோசடி கும்பலைச் சேர்ந்த கோயம்பேடு அசுபதி (வயது 30), வீரமணி (23), பிரேம்குமார் (23) ஆகிய 3 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து, 4 கார்கள் மீட்கப்பட்டன. நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜா (41), நெல்லை சி.என்.கிராமத்தைச் சேர்ந்த உடையார் (26) ஆகிய மேலும் 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்தும் 2 சொகுசு கார்கள் மீட்கப்பட்டன.

கும்பல் தலைவன் தலைவன் தலைமறைவு: இந்த கார் மோசடி கும்பலின் தலைவனாக செயல்பட்ட, நெல்லையைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவர் 100–க்கும் மேற்பட்ட கார்களை விற்று அல்லது அடமானம் வைத்து மோசடி செய்துவிட்டதாக புகார்கள் வந்துள்ளன. அவரை தனிப்படை போலீசார் தேடிவருகிறார்கள்.

விற்பனை செய்யுமிடம்: சென்னையில் இதுபோல் மோசடி செய்யப்பட்ட கார்களை தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை: சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், இதுபோன்ற கும்பலிடம், வாடகைக்கு ஆசைப்பட்டு தங்கள் கார்களை கொடுத்து மோசம் போய்விடவேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
(19 Sep 2014 தினத்தந்தி பத்திரிக்கை செய்தியின் சுருக்கம்) 
காருக்கு வாடகை தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து முறைகேடு செய்யும் கார் மோசடி கும்பல்கள், rental car cheating case in chennai, awareness news, Vilippunarvu seidhigal, car vadakai tharuavadhaaga mosadi,

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'மோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.. ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
மோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..
Tamil Fire
5 of 5
காருக்கு வாடகை தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து முறைகேடு செய்யும் கார் மோசடி கும்பல்கள்.. (18 செப், 2014) சென்னை: காருக...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News