19 செப்டம்பர் 2014

, ,

அரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review

Aranmanai Movie review, Tamil horror thriller film Aranmanai directed by Sundar C, Hansika Motwani, Vinay Rai, Andrea Jeremiah, Lakshmi Rai, Music by Bharathwaj

அரண்மனை சினிமா விமர்சனம் | Aranmanai cinema review

கதை, திரைக்கதை, இயக்கம் :  சுந்தர்  சி .
தயாரிப்பு: தினேஷ் கார்த்திக்
நடிகர்கள்: ஹன்சிகா மொத்வாணி, வினை ராய், ஆண்ட்ரியா, லக்ஷ்மி ராய், சுந்தர்  சி, கோவை சரளா, சந்தானம்
இசை: பரத்வாஜ்
Release Date: 19 Sep 2014

ஹன்சிகா நடித்து சுந்தர் சீ இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திகில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படம் அரண்மனை. இந்த படத்தில் தமன்னா நடிக்கவேண்டியாதாக இருந்தது அனால் அவருக்கு பதிலாக ஹன்சிகா நடித்துள்ளார்.

படத்தின் முதல் பாதியை கோவை சரளா மற்றும் சந்தானம் காமெடியில் கலக்கியுள்ளார்,  திகில் காட்சிகள் பார்ப்பவர்களை சிதறடிக்கிறது.
பெரும்பாலான மக்கள் பேய் இருப்பதை நம்புகின்றனர். இதற்கு காரணம் பயம். இந்த பயம் என்ற ஒரு ஆயுதத்தை இயக்குனர் சுந்தர்.சி கையில் எடுத்து அதில் காமெடி என்ற மசாலைவை கலந்து ஜாலியாக கொடுத்திருக்கும் படம் தான் இந்த அரண்மனை.

கதை என்னவோ சந்திரமுகி, காஞ்சனா ஸ்டையில் இருந்தாலும் அதில் சுந்தர்.சி என்ன புதுமை செய்திருக்கிறார் என்பதே படத்தின் முக்கிய மேட்டர். படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ரசிகர்களை மிரட்டி சீட்டின் நுனிக்கு வரவைக்கிறது கதை. சுந்தர்.சி படம் என்றாலே கமர்ஷியல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், அந்த வகையில் இதில் எந்த குறையும் வைக்கவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலமே சந்தானம் தான், விட்ட இடத்தை பிடித்து விட்டார், அதற்கும் ஒரு பஞ்சாக படத்தில் "இவன்லாம் எனக்கு காம்ப்பட்டிசனே கிடையாது, ஏதோ கேப்ல வந்துட்டான்” போன்ற சூரிக்கு விடும் மறைமுக தாக்குதல் வசனங்களுக்கு கைத்தட்டல் பறக்கிறது. குறிப்பாக மனோ பாலாவிடம் இவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் கைத்தட்டல் மற்றும் விசில் சத்தம் அடங்கவே சில மணி நேரம் ஆகிறது.

இதுவரை வெறும் அழகிகளாக மட்டும் பார்த்து வந்த ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி போன்றோரை மிரட்டும் கெட்டப்பில் காட்டி நம்மையும் கதிகலங்க வைத்துள்ளார் இயக்குனர். படத்தின் ஒரே பலவீனம் பாடல்கள் மட்டும் தான், அதையும் பின்னணி இசையில் மூலம் ஓவர் டேக் செய்து விடுகிறார் பரத்வாஜ்.

மொத்தத்தில் கவலைகள் மறந்து திகிலும் காமெடியும் கலந்த காப்பி குடித்த சந்தோஷம் கிடைக்க நம்பி அரண்மனைக்குள் போகலாம். 

Aranmanai official Trailer:

Aranmanai Movie review,cinema vimarshanam, Tamil horror thriller film Aranmanai directed by Sundar C, Hansika Motwani
Aranmanai Movie review, Tamil horror thriller film Aranmanai directed by Sundar C, Hansika Motwani, Vinay Rai, Andrea Jeremiah, Lakshmi Rai, Music by Bharathwaj, Aranmanai kadhai, performance, story, comedy, songs review, editing review, graphics vimarsanam, tamil cinema reviewsஎனதருமை நேயர்களே இந்த 'அரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News