சதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்கிறது ஆய்வு! | Tamil247.info

சதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்கிறது ஆய்வு!

கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அதிக நேரம் பேஸ்புக்கில் செலவழிப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.!

நியூயார்க்: கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அதிக நேரம் பேஸ்புக்கில் செலவழிப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதே நேரம் அவர்கள் அதிகம் ஷேர், லைக் ஏதும் செய்யமால் வெறுமனே வேடிக்கைதான் பார்த்துக் கொண்டுள்ளார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பேஸ்புக் பயனாளிகள் குறித்த ஆய்வை நடத்திய அல்பமா பல்கலைக்கழகம் மேற்கண்ட விவரங்களை கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் பவிகா செல்டன் கூறியதாவது:
shy type peoples getting addicted to Facebook and spend more time on Facebook, Daily Tamil news

என்னதான் பேஸ்புக்கே கதியாய் கிடந்தாலும், நிஜ வாழ்க்கையை போலவே பேஸ்புக்கிலும் அவர்கள் அமைதியானவர்களாகவே உள்ளனர். போட்டோ, ஸ்டேட்டஸ் போன்றவற்றை ஷேர் மற்றும் லைக் செய்வது மிகவும் குறைவாகும். பிறரது தகவல்களை மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள். பேஸ்புக்கில் ஏதாவது விவாதத்தில் கலந்துகொண்டால் அசிங்கபட்டுவிடுவோமோ என்று  எந்த விவாதத்திலும் பங்கேற்பதில்லை.

அதே நேரம் வெளியுலகில் சுறுசுறுப்பாக, கூச்சம் அற்றவர்களாக உள்ளவர்கள் பேஸ்புக்கிலும் அதே நிலையில் உள்ளனர். அதாவது, நிலைத் தகவல்கள், போட்டோக்களை அடிக்கடி போட்டு கலக்கி வருகிறார்கள். ஆனால் இவர்கள் பேஸ்புக்கில் குறைந்த நேரமே செலவழிக்கிறார்கலாம் .

கூச்ச சுபாவம் கொண்டவர்களுக்கு பேஸ்புக் மேலும் கூச்ச சுபாவத்தையே பரிசளிக்கிறது. சுட்டித்தனம் கொண்டவர்கள் மேலும் சுட்டியாக இருக்கவும் பேஸ்புக் உதவுகிறது. எனவே பேஸ்புக்கால் உபயோகிப்பவர்களின் சுபாவத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதே வேளையில் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் வெளியுலகுடன் ஓரளவாவது தொடர்பில் இருக்க பேஸ்புக் உதவுகிறது. இவ்வாறு ஆய்வு கூறுகிறது.
shy type peoples getting addicted to Facebook and spend more time on Facebook, Daily Tamil news, Latest news, Vinodha seidhigal, aaraichi thagaval, technology news,  Sye peoples are more in facebook, awareness news, Facebook addicts, muga puththagam, koocha subaavam, koocham

இந்த 'சதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்கிறது ஆய்வு!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
சதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்கிறது ஆய்வு!
Tamil Fire
5 of 5
கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அதிக நேரம் பேஸ்புக்கில் செலவழிப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.! நியூயார்க்: கூச்ச சுபாவம்...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment