விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாயின் மாமிசத்தைச் சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் | Tamil247.info

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாயின் மாமிசத்தைச் சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நார்த் கிராஸ் ரிவர் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம், நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தனர்.

ஆனால், அந்த செல்லநாய் பக்கத்து வீட்டு கோழிகள் இடும் முட்டைகளை திருட்டுத்தனமாக தின்று வந்துள்ளது. இதனால் தனது நாயினைக் கொல்ல முடிவு செய்தார் அதன் உரிமையாளர். அதன்படி, விஷம் கலந்த முட்டையை நாயின் பார்வையில் படும்படி வைத்தார். வழக்கம்போல, அந்த முட்டைகளையும் சாப்பிட்ட நாயின் உடல்நிலைப் பாதித்தது.

Poisoned dog meat eat family members died, dog meat, shocking news in tamilஉயிருக்குப் போராடிய நாயை சமைத்துச் சாப்பிடுவது என முடிவெடுத்தார் முதலாளி. அதன்படி, அந்தநாயை வெட்டிச் சமைத்து குடும்பத்தார் அனைவரும் சாப்பிட்டுள்ளனர். மீதமிருந்த சாப்பாடை தனது அக்கம்பக்கத்தாருக்கும் கொடுத்துள்ளார். நாயின் உடலில் ஏறியிருந்த விஷம் மாமிசத்திலும் கலந்திருந்ததால் அந்தக் கறியை சாப்பிட்டவர்கள் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாயின் உரிமையாளர், அவரது 2 குழந்தைகள் மற்றும் அருகாமையில் வசிக்கும் மேலும் இருவர் என மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். நாய்க் கறியைச் சாப்பிட்டு 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Poisoned dog meat eat family members died, dog meat, shocking news in tamil, tamil news daily, vinodha seidhigal, achariya seidhigal, Tamil seidhigal
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாயின் மாமிசத்தைச் சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாயின் மாமிசத்தைச் சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
Tamil Fire
5 of 5
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நார்த் கிராஸ் ரிவர் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம், நாய் ஒன்றை ச...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News