மூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள் | Tamil247.info

மூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

மூக்கடைப்பு சரியாக எளிய வைத்தியம்..

இரவில் மூக்கடைப்பு: இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம்.

சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும்.

காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

வறட்சியான காற்று:  வறட்சியான காற்றை அதிகப்படியாக சுவாசிக்க நேர்ந்தாலும், மூக்கில் அடைப்புகள் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய அடைப்புக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் பொதுவானவையே.

Mookadaippu sariyaaga eliya iyarkkai vaithiyangal, vaiththiyam, மூக்கடைப்பு சரியாக
ஆவி பிடித்தல்: மூக்கடைப்பின் போது, ஆவிப் பிடித்தால், உடனே மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம். மேலும் மூக்கு ஒழுகுதல் இருந்தாலும் குணமாகிவிடும். அதிலும் அரை வாளி சூடான நீரில் 3 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து, ஆவி பிடித்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

சூடு நீர் குளியல்: மூக்கில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் போது, சூடு நீர் குளியலை மேற்கொண்டால், உடனே மூக்கடைப்பு நீங்கிவிடும்.

காரமான உணவுகள்:  நல்ல காரமான உணவுகளை சாப்பிட்டால், உடலில் வெப்பமானது அதிகரித்து, சளியானது தளர்ந்து வெளியேற்றப்படும். இதனால் மூக்கடைப்பும் நீங்கும்.

சூடான டீ: மூக்கடைப்பில் இருந்து உடனே விடுபட வேண்டுமெனில், சூடான ஒரு கப் டீ குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், வெதுவெதுப்பான ஏதேனும் நீர்மத்தை குடித்தால், அது மூக்கில் அடைப்பை ஏற்படுத்திருக்கும் பொருளை தளரச் செய்து, நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். ஆனால் நல்ல சூடான இஞ்சி டீயைக் குடித்தால், அதில் உள்ள மருத்துவ குணங்களால், மூக்கில் உள்ள அடைப்புகளுடன், அங்குள்ள புண்களும் குணமாகிவிடும்.

சூடான தக்காளி சூப்: 1 கப் தக்காளி சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, நன்கு சூடேற்றி, ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பாக குடித்தால், மூக்கடைப்பு குணமடையும்.


தண்ணீர் மற்றும் உப்பு: இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில், 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கலந்து, அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால், மூக்கடைப்பு நொடியில் குணமாகும்.

வெங்காயம்:  வெங்காயத்தை நறுக்கி, அதனை நுகர்ந்து பார்த்தால், மூக்கடைப்பு நீங்கும். இல்லையென்றால், வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டாலும், மூக்கடைப்பு போய்விடும்.
மூக்கடைப்பு நீங்க, Mookadaippu, Mokadaippu, Nasal Congestion, mookil sali thollai, Mookadaippu sariyaaga eliya iyarkkai vaithiyangal, vaiththiyam, மூக்கடைப்பு சரியாக, natural remedies for nasal congestion, nose block, cold attack, sali, sinus, thummal, sali thollaigal nivarthiyaga, sudu thanni, uppu thanni, inji tea, vengayam, tomotto soup, thakkali soup

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'மூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள்' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
மூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள்
Tamil Fire
5 of 5
மூக்கடைப்பு சரியாக எளிய வைத்தியம்.. இரவில் மூக்கடைப்பு: இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News