[சமையல்] கோதுமை அடை | Tamil247.info
Loading...

[சமையல்] கோதுமை அடை

கோதுமை அடை செய்முறை

தேவையான பொருட்கள்:

  Kodhumai adai seimurai, tamil cooking, tamil recipes
 1. முழு கோதுமை - 200 கிராம்
 2. பச்சரிசி - 150 கிராம்
 3. கடலைப் பருப்பு - 100 கிராம்
 4. உளுத்தம் பருப்பு - 100 கிராம்
 5. காய்ந்த மிளகாய்- 10 முதல் 12
 6. சீரகம் - 1 டீஸ்பூன்
 7. பெருங்காயம் - அரை டீஸ்பூன்
 8. துருவிய கேரட், முட்டை கோஸ் - அரை கப்
 9. தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு

குக் செய்யும் முறை:

முழு கோதுமையை 10 மணி நேரம் ஊறவைக்கவும். பச்சரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் இவற்றை 1 மணி நேரம் ஊறவைக்கவும். இவற்றை ஊறிய கோதுமையுடன் சேர்த்து ரவை ரவையாக அரைக்கவும். அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயம், சீரகம், துருவிய கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை அடையாக வார்த்து, சுற்றிலும் தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். வெண்ணெய், வெல்லம் ஆகியவற்றையும் தொட்டுக் கொள்ளலாம்.

செய்தவர்:லட்சுமி சீனிவாசன்
(தி இந்து நாளிதழில் வெளிவந்த சமையல் )
Kodhumai adai seimurai, tamil cooking, tamil recipes, Wheat dosa, chef samayal, samaikkum murai, indian recipes in tamil, paccharisi, uluttham paruppu, kadalai paruppu, milagai, ravai, carrot, cabbage, butter, Jaggery, thengai chatni 
Loading...

எனதருமை நேயர்களே இந்த '[சமையல்] கோதுமை அடை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
[சமையல்] கோதுமை அடை
Tamil Fire
5 of 5
கோதுமை அடை செய்முறை தேவையான பொருட்கள்: முழு கோதுமை - 200 கிராம் பச்சரிசி - 150 கிராம் கடலைப் பருப்பு - 100 கிராம் உளுத...
URL: HTML link code: BB (forum) link code:
  Blogger Comment
  Facebook Comment