16 செப்டம்பர் 2014

,

'ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து...

Arnold Schwarzenegger teach a lesson in director Shankar Ai tamil Movie Music release function, Tamil film Ai music release on 15th Sep 2014, kollywood news, tamil cinema news, Hollywood actors in tamil cinema functions, Arnold angry in music release function in chennai

'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தமிழ் திரையுலகத்தினருக்கு 'காலம் பொன் போன்றது' என்பதை சொல்லிதந்துள்ளார், ஏனென்றால் இசை வெளியீட்டு விழா நடந்த விதம் அப்படி...

இதுவரை ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு நமது தமிழ் படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கின்றனர்.

'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்போது, அதில் கலந்துகொண்ட ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கேசட் விளம்பரத்தைச் சுற்றிருந்த பேப்பரை கிழித்து அப்படியே கீழே போட்டு விட்டு அதை கண்டு கொள்ளாமல் மற்றவர்கள் இருந்த வேளையில் தானே அந்தக் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுவதற்கு நடந்து சென்றார். உடனே சுற்றிருந்த நடிகர்கள் மற்றும் சினிமா துறையினர் சுதாரித்துகொண்டு அவரிடம் இருந்த பேப்பரை வாங்கி ஒரு உதவியாளரிடம் கொடுத்துவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்க அவரை அழைத்தனர். இருந்தாலும், குப்பைப் பேப்பரை வாங்கிச் சென்ற அந்த உதவியாளர் சரியாக குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைப் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும்பொழுதும் பார்த்து கொண்டே இருந்தார்.  இந்த விஷயம் 'தசாவதாரம்' இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்த பொது பரபரப்பாக பேசப்பட்டது.

அதேபோல் 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து...
Arnold Schwarzenegger teach a lesson in director Shankar Ai tamil Movie 
Music release function, Tamil film Ai music release on 15th Sep 2014
Super star Rajini, Arnold Schwarzenegger in director S Shankar's Ai (or I) Movie Music release function

'ஐ' இசை வெளியீட்டு விழாவிற்கு பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.

ரஜினியை அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். சில நிமிடங்கள் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். பிறகு ஷங்கர், புனித் ராஜ்குமார் கடைசியாக அர்னால்டு அழைத்து வரப்பட்டார்.

arnold angry in chennai

அவரது முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. நிறைய பாடி பில்டர்கள் படங்களின் பாடல்களுக்கு ஏற்றவாறு பாடி பில்ட் நிகழ்ச்சியை அரங்கேற்றி, நேரடியாக அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு ஆவலுடன் இணைந்து மேடையேறிய அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.

இதை கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிம்ஹா குறுக்கிட்டு, 'படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்' என்று கூறவே, "நான் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தொடங்கி தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.


இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


'ஐ' படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை.

'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் பொன் போன்றது' என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.
(தி இந்து பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியின் சுருக்கம் )Arnold Schwarzenegger teach a lesson in director Shankar Ai tamil Movie Music release function, Tamil film Ai music release on 15th Sep 2014, kollywood news, tamil cinema news, Hollywood actors in tamil cinema functions, Arnold angry in music release function in chennaiஎனதருமை நேயர்களே இந்த ''ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News