அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? - கருத்துக் கணிப்பு - அதிர்ச்சிகரமான தகவல் | Tamil247.info

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? - கருத்துக் கணிப்பு - அதிர்ச்சிகரமான தகவல்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? - கருத்துக் கணிப்பு - அதிர்ச்சிகரமான தகவல்

03 Sep 2014: சென்ற வாரம், வார இதழ் ஒன்றில் "அடுத்த சூப்பர் ஸ்டார் - கருத்துக் கணிப்பு" நடத்தி வெளியிட்டார்கள். இதில் விஜய் வெற்றி பெற்றதாக செய்தி வெளியிடப்பட்டது.

இந்தக் கருத்துக் கணிப்பு வந்தது முதல் பல்வேறு தரப்பிலும் முனகல்தானாம். இதனை சிலர் ஆதரித்தாலும்,அதிகமானோர் எதிர்ப்பையே வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருவர்தான்... என்று உறுதியாக இருக்கும் ரஜினி ரசிகர்கள் இத்தகைய கணிப்பு தேவைதானா என்கின்றனர். இந்தக் கருத்துக் கணிப்பு இப்போது எதற்காக நடத்தப்பட்டது என்று அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற இந்தக் கருத்துக் கணிப்பு குறித்து வேறு  சில அதிர்ச்சிகரமான தகவல் இணையதளத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Ajith vs Vijay who is next super star survey result controversy
அந்த வார இதழ் கருத்துக் கணிப்பு நடத்திய இடங்களில் எல்லாம் ரசிகர்கள் பெரும்பாலும் வாக்களித்தது அஜீத்துக்குத்தானாம். விஜய் பெயரை முன் மொழிந்தவர்கள் குறைவாகவே  இருந்தனராம். குறிப்பாக, அஜீத்துக்கும் விஜய்க்கும் ஒரு லட்சத்துக்கும் மேல் ஆதரவு வாக்கு வித்தியாசம் இருந்தததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அஜீத் தரப்பிடம் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவு குறித்து தெரிவிக்கப் படவில்லையாம். அஜீத்தை எளிதில் தொடர்பு கொள்ளவும் முடியாது. அப்படியே அஜீத்திடம் தெரிவித்திருந்தாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்கிற  ஆள் கிடையாது என்பது ஊரறிந்த ரகசியம்.

இந்நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக் கணிப்பின் முடிவாக, விஜய் பெயர் வெளிப்படுத்தப் பட்டது.

ஆனால் எதற்காக விஜய் பெயரை அறிவித்தார்கள் என பலரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.  இந்தச் செய்தியை அந்தக் கருத்துக் கணிப்பு நடத்திய நபர்களில் ஒருவரே வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த வார இதழ் இவ்வாறு செய்திருக்காது என்றே பலரும் பலமாக நம்புகிறார்கள்...

இது tamil247.info பதிவு அல்ல, தினமணி பத்திரிக்கையில் சமிபத்தில் வெளிவந்த பதிவு
Ajith vs Vijay who is next super star survey result controversy, tamil cinema news, kollywood news, Super star Ajith, Super star Vijay, vaara idhal nadathiya vaakeduppu, ultimate star Ajith, ilaya thalapathy Vijay

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? - கருத்துக் கணிப்பு - அதிர்ச்சிகரமான தகவல்' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? - கருத்துக் கணிப்பு - அதிர்ச்சிகரமான தகவல்
Tamil Fire
5 of 5
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? - கருத்துக் கணிப்பு - அதிர்ச்சிகரமான தகவல் 03 Sep 2014: சென்ற வாரம், வார இதழ் ஒன்றில் "அடுத்த...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News