பஸ்ஸை அடியோடு தூக்கி இருவர் உயிரை காப்பாற்றிய மக்கள்.. | Tamil247.info

பஸ்ஸை அடியோடு தூக்கி இருவர் உயிரை காப்பாற்றிய மக்கள்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

புனே, 3rd Sep 2014: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்தின் கீழே சிக்கிக் கொண்ட இருவரை மக்கள் பேருந்தையே அலேக்காக தூக்கி காப்பாற்றிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே நகரில் உள்ள க்யானேஸ்வர் படுக்கா சவுக் சிக்னலில் பேருந்து வந்துகொண்டிருந்த போது சிக்னலில் சிகப்பு விளக்கு போடப்பட்டது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் வேகமாக வந்த பேருந்து இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அஸ்வின் தோஷி மற்றும் சித்தார்த் டுடு ஆகிய இருவரும் பேருந்துக்கு கீழே வகையாக சிக்கிக்கொண்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சுதாரித்து ஏராளமானோரை துணைக்கு அழைத்து பேருந்தை அலேக்காக தூக்கினர். கிட்டதட்ட 50 பேர் சேர்ந்து பஸ்ஸை அடியோடு தூக்கினர்.

பொதுமக்களின் இந்த துணிச்சலான நடவடிக்கையால் பேருந்துக்கு கீழே இருந்த இருவரும், விரைவாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கப்பட்டனர்.  அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர்கள் இருவரும் அபாய கட்டத்தை தாண்டி நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

புத்திசாலி புனே வாசிகள்: புனே மக்களின் இந்த புத்திசாலித்தனமான நடவடிக்கையால்தான் இரண்டு உயிர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டுள்ளன.

பெர்த் சம்பவ பாதிப்பு: சமீபத்தில் இப்படித்தான் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபரை மீட்க ரயிலையே ஆயிரக்கணக்கான பயணிகள் சேர்ந்து ரயிலை ஒரு பக்கம் சாய்த்து மீட்டனர். அதேபோல இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பஸ்ஸை அடியோடு தூக்கி இருவர் உயிரை காப்பாற்றிய மக்கள், people pulled a bus to rescue boys, 50 people lift a bus to save trapped students in an accident, power of indians, perundhai thookki uyirai kappatriya makkal, manidhabimanam, vinodha seidhigal, tamil news daily  
people pulled a bus to rescue boys, power of indians, manidhabimanam, vinodha seidhigal
பஸ்ஸை அடியோடு தூக்கி இருவர் உயிரை காப்பாற்றிய மக்கள், people pulled a bus to rescue boys, 50 people tilt a bus to save students from accident, power of indians, perundhai thookki uyirai kappatriya makkal, perundhai thookiya podhu makkal, manidhabimanam, vinodha seidhigal, tamil news daily, lift bus to rescue trapped guys

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பஸ்ஸை அடியோடு தூக்கி இருவர் உயிரை காப்பாற்றிய மக்கள்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பஸ்ஸை அடியோடு தூக்கி இருவர் உயிரை காப்பாற்றிய மக்கள்..
Tamil Fire
5 of 5
புனே, 3rd Sep 2014: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்தின் கீழே சிக்கிக் கொண்ட இருவரை மக்கள் பேருந்தையே அலேக்காக தூக்கி காப்பாற்றிய சம்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News