100க்கும் மேற்பட்ட உயிரை காப்பாற்றிய 10 வயது பள்ளி மாணவி - ஆசிரியர் தின பதிவு | Tamil247.info

100க்கும் மேற்பட்ட உயிரை காப்பாற்றிய 10 வயது பள்ளி மாணவி - ஆசிரியர் தின பதிவு

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

சுனாமி வரவிருக்கும் 5 நிமிடத்திற்கு முன் அனைவரையும் கடற்கரையை விட்டு வெளியேற செய்து காப்பற்றினாள்..!

கடந்த 2004 டிசம்பர் 26 அன்று வந்த சுனாமி பேரலை பல நாடுகளை தாக்கியது. பல கிராமங்கள் அடியோடு அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், பேரலையால் அடித்துச் செல்லப்பட்டனர்.

அதே வேளையில் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு கடற்கரை பகுதியில் குளித்துகொண்டிருந்த 100க்கும் மேற்ப்பட்டவர்கள் மட்டும் உயிர் தப்பினர். யாரும் இறக்கவில்லை, சுனாமியால் அடித்து செல்லப்படவில்லை. அவர்கள்  மட்டும் சுனாமியில் இருந்து தப்பியது எப்படி..?  சுனாமி வரப்போகிறது என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்..??

சொல்கிறேன் கேளுங்க..  அவர்கள் அனைவரும் தப்பிக்க காரணமாக இருந்தவள் ஒரு 10 வயது பள்ளி மாணவி, இங்கிலாந்தை சேர்ந்த டில்லி ஸ்மித் சுற்றுலவிர்க்காக தனது பெற்றோருடன் தாய்லாந்தில் உள்ள புக்கட் சென்றபோதுதான் இந்த நிகழ்ச்சி நடந்தது, சுனாமி வருவதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன் அவளுடைய பள்ளி ஆசிரியை பேரலை என்றால் என்ன, ராட்சத பேரலை வருவதை எப்படி தெரிந்துகொள்ளலாம், பேரலையின் பின்விளைவுகள் என்ன என்பது போன்ற தகவல்களை தனது மாணவர்களுக்கு சொல்லிதந்திருக்கிறார்..

ஆசிரியையிடமிருந்து  பயின்ற பாடத்தை நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்ததன் விளைவாக 100க்கும் மேற்ப்பட்ட சுற்றுலா பயணிகளை காப்பாற்ற முக்கிய காரணமாக திகழ்ந்தாள்.
10 year old girl saved 100 people from tsunami, teachers day special
திடீரென கடல் உள் வாங்கியதையும், பறவைகள் வித்தியாசமாக குரல்களுடன் அங்குமிங்கும் பறப்பதையும் கண்டவுடன் பேரலை வரபோகிறது என அறிந்துகொண்டாள். ஆனால், அந்த கடற்கரையில்  இருந்தவர்கள் ஏதோ வித்தியாசமாக நடப்பதாக நினைத்து ஆச்சரியத்துடன் புகைப்படம் எடுப்பதிலும் கடலினுள் சென்று விளையாடுவதிலும் ஆர்வவமாக இருந்தனர். இருந்தபொழுதும் பேரலை வரபோகிறது என்பதை தனது பெற்றோரிடம் சொல்லி அங்கு உள்ள ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் கடற்கரையில் இருந்த சுற்றுலா பயணிகளிடமும் புரியவைத்தாள்.  கடைசியில்,  சுனாமி வரவிருக்கும் 5 நிமிடத்திற்கு முன் அனைவரையும் கடற்கரையை விட்டு வெளியேற செய்து காப்பற்றினாள்...


இந்த நிகழ்வு எதற்க்காக சொல்லப்படுகிறது என்றால், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் பிள்ளைகள் தான் பயிலும் பாடங்களை நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் பயின்ற பாடத்திற்கு நிஜ விளக்கம் புரியும்... ஆசிரியர்களும் மாணவர்களுக்கு விளங்கும் விதமாக நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடும் வகையில் பாடங்களை சொல்லித்தர வேண்டும்...

Source: http://en.wikipedia.org/wiki/Tilly_Smith

அன்புடன் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..
100 per uyirai kaappatriya 10 vayadhu palli maanavi, adhisayam, 10 year old girl saved 100 people from tsunami, teachers day special, palliyil evvaru padikka vendum, palli paadam, aasiriyar dhinam, learning tips for school kids, vinodha seidhigal, educational news

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த '100க்கும் மேற்பட்ட உயிரை காப்பாற்றிய 10 வயது பள்ளி மாணவி - ஆசிரியர் தின பதிவு ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
100க்கும் மேற்பட்ட உயிரை காப்பாற்றிய 10 வயது பள்ளி மாணவி - ஆசிரியர் தின பதிவு
Tamil Fire
5 of 5
சுனாமி வரவிருக்கும் 5 நிமிடத்திற்கு முன் அனைவரையும் கடற்கரையை விட்டு வெளியேற செய்து காப்பற்றினாள்..! கடந்த 2004 டிசம்பர் 26 அ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News